• Nov 28 2024

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பாராட்டை பெற்ற வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை...!samugammedia

Sharmi / Jan 17th 2024, 10:13 am
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட 35 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கடந்த 2 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவு என்கிற ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது.

பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்று வரும் மேற்படி வேலைத்திட்டத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறார்கள்.

தனித்தனியாக கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னர் வாராந்தம் வெள்ளி தோறும் ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளில் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சரியான முறையில் குப்பை கூளங்களை உரிய முறையில் அகற்றி வருவதோடு, தற்போது டெங்கு தடுப்பு வேலைத்திட்டத்தையும் சிறப்பாக முன்னெடுக்கும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் செயலாளர்  மற்றும் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பாராட்டை பெற்ற வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.அந்தவகையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட 35 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கடந்த 2 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவு என்கிற ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது.பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்று வரும் மேற்படி வேலைத்திட்டத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறார்கள்.தனித்தனியாக கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னர் வாராந்தம் வெள்ளி தோறும் ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளில் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சரியான முறையில் குப்பை கூளங்களை உரிய முறையில் அகற்றி வருவதோடு, தற்போது டெங்கு தடுப்பு வேலைத்திட்டத்தையும் சிறப்பாக முன்னெடுக்கும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் செயலாளர்  மற்றும் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement