காணி மோசடிகள் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக பொலிஸார் எடுத்த நடவடிக்கையை வரவேற்று, இதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுத்தார்.
வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) நடைபெற்றது.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பிரதேச சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது, பொலிஸாரின் நடவடிக்கையில் முன்னேற்றம் இருப்பதாகவும், சில பொலிஸ் நிலையங்களில் மக்கள் முறைப்பாடுகள் ஏற்கப்படாமல் இருக்கிறது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
மக்கள் நம்பிக்கையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் .
பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசல், விபத்து மற்றும் அவற்றை தடுக்கும் நடவடிக்கைகள், பொலிஸார் பள்ளி முன் கடமையில் அமர வேண்டும்.
வீதிகளில் அதிக வாகனங்கள் தரித்து நிற்பது, பாடசாலை அருகிலுள்ள கரையோரங்களில் வாகனங்கள் தரித்து நிற்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி, கனரக வாகனம் தடை உள்ளிட்ட வழிகளை கருத்தில் கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் வேம்படிச் சந்தியிலுள்ள சமிஞ்சையைக் கவனியாது பெற்றோர் மாணவர்களுடன் பயணிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஆபத்தானவை.
மேலும் இரவு நேரங்களில் குப்பைபோடும் நடவடிக்கைகளும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுடன் இணைந்து தடுக்கவேண்டும் என்றார்.
இதன் போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் பிரதான பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்,
அதில் சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல், போதைப்பொருள் முதன்மையாக உள்ளதென தெரிவித்தனர்.
இறுதியில் ஆளுநருடன் கலந்துரையாடிய அதிகாரிகள் இந்த பிரச்சினைகளை தீர்க்க இணைந்து பணியாற்றுவதாக உறுதிமொழி வழங்கினர்.
காணி மோசடிகள், சமூக பிரச்சினைகளுக்கு எதிராக பொலிஸார் எடுத்த நடவடிக்கையை வரவேற்ற வடக்கு ஆளுநர் காணி மோசடிகள் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக பொலிஸார் எடுத்த நடவடிக்கையை வரவேற்று, இதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.மேலும், கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுத்தார். வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) நடைபெற்றது. ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பிரதேச சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலின் போது, பொலிஸாரின் நடவடிக்கையில் முன்னேற்றம் இருப்பதாகவும், சில பொலிஸ் நிலையங்களில் மக்கள் முறைப்பாடுகள் ஏற்கப்படாமல் இருக்கிறது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,மக்கள் நம்பிக்கையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் .பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசல், விபத்து மற்றும் அவற்றை தடுக்கும் நடவடிக்கைகள், பொலிஸார் பள்ளி முன் கடமையில் அமர வேண்டும்.வீதிகளில் அதிக வாகனங்கள் தரித்து நிற்பது, பாடசாலை அருகிலுள்ள கரையோரங்களில் வாகனங்கள் தரித்து நிற்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி, கனரக வாகனம் தடை உள்ளிட்ட வழிகளை கருத்தில் கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணத்தில் வேம்படிச் சந்தியிலுள்ள சமிஞ்சையைக் கவனியாது பெற்றோர் மாணவர்களுடன் பயணிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஆபத்தானவை. மேலும் இரவு நேரங்களில் குப்பைபோடும் நடவடிக்கைகளும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுடன் இணைந்து தடுக்கவேண்டும் என்றார்.இதன் போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் பிரதான பிரச்சினைகளை எடுத்துரைத்தனர், அதில் சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல், போதைப்பொருள் முதன்மையாக உள்ளதென தெரிவித்தனர்.இறுதியில் ஆளுநருடன் கலந்துரையாடிய அதிகாரிகள் இந்த பிரச்சினைகளை தீர்க்க இணைந்து பணியாற்றுவதாக உறுதிமொழி வழங்கினர்.