• Oct 11 2025

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100 சதவீத வரி அறிவித்த ட்ரம்ப்.! அச்சத்தில் உலக நாடுகள்

Aathira / Oct 11th 2025, 10:06 am
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். 

அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதி தொடர்பில் சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்த சில மணி நேரங்களுக்குப் பின்,  ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய வரிகள், கட்டுப்பாடுகள் நவம்பர் முதலாம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

ஏற்கனவே  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களும் அதிக வரிகளுக்கு உட்பட்டுள்ளன. 

அதில் எஃகு, அலுமினியத்திற்கு 50 சதவீதம் முதல் நுகர்வோர் பொருட்களுக்கு 7.5 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட்டது.

மேலும், 'முக்கியமான மென்பொருள்களுக்கு' ஏற்றுமதி கட்டுப்பாட்டை அமெரிக்கா விதிக்க உள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, உலகளாவிய வர்த்தக போருக்கு புதிய சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீனாவின்  அரிய கனிம ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்குப் பிறகு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் உலக சந்தைகளும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100 சதவீத வரி அறிவித்த ட்ரம்ப். அச்சத்தில் உலக நாடுகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதி தொடர்பில் சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்த சில மணி நேரங்களுக்குப் பின்,  ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த புதிய வரிகள், கட்டுப்பாடுகள் நவம்பர் முதலாம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களும் அதிக வரிகளுக்கு உட்பட்டுள்ளன. அதில் எஃகு, அலுமினியத்திற்கு 50 சதவீதம் முதல் நுகர்வோர் பொருட்களுக்கு 7.5 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட்டது.மேலும், 'முக்கியமான மென்பொருள்களுக்கு' ஏற்றுமதி கட்டுப்பாட்டை அமெரிக்கா விதிக்க உள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு, உலகளாவிய வர்த்தக போருக்கு புதிய சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின்  அரிய கனிம ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்குப் பிறகு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் உலக சந்தைகளும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement