காசாவில் நடந்த விடயங்களை எத்தனையோ நாடுகள் பேசுகின்றன. ஆனால் இங்கு எமக்கு நடந்த, செம்மணியில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு நடந்த விடயங்களை ஏன் சர்வதேசம் பேச மறுக்கின்றது.
இதற்கான ஒரு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதற்கு முன்வராமலிருப்பது எங்களுக்கு மனவேதனையான விடயம் என கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
செம்மணி மனித புதைகுழியானது தமிழின அழிப்பின் அடையாளம் எனவும் அங்கிருந்த நினைவுச்சுடர் ஏற்றும் தூபி உடைக்கப்பட்டதானது இந்த நாட்டின் இனவாத முகத்தினை காட்டி நிற்பதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று காலை கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றது.அதில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களின் தலைவிகள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி, கடந்த மே மாதம் ஐநா ஆணையாளர் இலங்கைக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திவிட்டு சென்றவர்.
அதேநேரம் செம்மணியில் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட மக்களின் எழும்புக்கூடுகள் தோண்டப்பட்ட நிலையில் அணையா விளக்கு என்னும் நினைவுத்தூபியினை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களாக வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் இணைந்து அங்கு அணையா விளக்கு போராட்டத்தினையும் முன்னெடுத்திருந்தனர்.அங்கு ஐநா ஆணையாளரும் வந்து வணங்கிச்சென்றிருந்தார்.
அதேபோன்று கடந்த மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 01ஆம் திகதி வரையில் செம்மணிக்கு நீதிகோரிய வகையில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளினால் அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுவந்தது. அந்த நினைவுத்தூபியானது இனவாதிகளினால் கடந்த 09ஆம் திகதி உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.
செம்மணியில் புதைக்கப்பட்ட ஆத்மாக்களுக்குகூட நீதி கிடைக்கக்கூடாது என்ற நோக்குடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய நினைவுத்தூபியைக்கூட வைத்து எமக்கான நீதியை கோரமுடியாத நிலையே இந்த அரசு காலகட்டத்திலும் ஏற்படுகின்றது.
எமதுபோராட்ட இத்திற்கு வந்த ஐநா ஆணையாளர் எமது வலியை புரிந்துகொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்று கூறிச்சென்ற நிலையில் தற்போதைய ஐநா அமர்வில் வெளிவந்திருக்கின்ற அறிக்கையானது பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களுக்கு பாரிய ஏமாற்றத்தினையே தந்துள்ளது.
கடந்தகாலத்திலிருந்து அரசுகளுக்கு வழங்கியதுபோன்று தற்போதுள்ள அரசுக்கும் கால அவகாசத்தினை வழங்கியிருக்கின்றார்கள்,மீண்டும் உள்ளக பொறிமுறையினை திணித்திருக்கின்றார்கள்.
சர்வதேச தரத்திலான விசாரணையொன்று வேண்டும் என்றே பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.இந்த நிலையிலேயே தற்போது வெளிவந்துள்ள அறிக்கை ஏமாற்றமளிக்கின்றது.
இந்த அனுர அரசாங்கத்தினை நம்பிய ஐநா சபையானது எங்களுக்கு பாராமுகமாக இவ்வாறான விடயத்தினை செய்திருப்பதானது எங்களுக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.இந்த அரசாங்கமானது இரண்டு முகங்களை காட்டிநிற்கின்றது.சர்வதேச நாடுகளிடம் ஒரு முகத்தினை காட்டுகின்றது,இலங்கைக்கு வந்து ஒரு முகத்தினை காட்டுகின்றது.
பாதிக்கப்பட்டமக்களுக்கு,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு தீர்வினை வழங்கவேண்டும்,பொறுப்புக்கூறவேண்டும் என்ற எண்ணப்பாடு இல்லாத நிலையிலேயே இந்த அரசாங்கமும் செயற்பட்டுவருகின்றது.
இந்த அரசாங்கம் செம்மணி புதைகுழி விடயத்திலும் சரியான கரிசனை காட்டியதாகயில்லை.அதேபோன்று தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைத்த விடயத்திலும் எந்த கரிசனையும் காட்டப்படவில்லை.
இந்த 17வருடத்தில் எங்களுக்கு கிடைக்காத நிலையில் இந்த அரசாங்கத்தின் மீது எந்த நம்பிக்கையின் கீழ் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளக பொறிமுறையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டுசென்றுள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
சர்வதேச தரத்திலான ஒரு நீதிவிசாரணையே எங்களுக்கு தேவையென நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம்.
இங்கும் சில குழுக்களாக பிரிந்துகொண்டு சகோதர இனத்திற்கு நடந்ததும் எங்களுக்கு நடந்ததும் ஒரு சமநிலையான போர்க்குற்றம் என்ற நிலைக்குள் கொண்டுவருகின்றார்கள்.
எங்களுக்கு நடந்ததுவேறு அவர்களுக்கு நடந்ததுவேறு.அவர்களுக்கு நடந்தது ஒரு குற்றச்செயல்.தமிழ் மக்களுக்கு நடந்தது திட்டமிட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டதும் திட்டமிட்ட இனஅழிப்பும் ஆகும்.அதனையும் இதனையும் சில குழுக்கள் சமநிலைப்படுத்தி சர்வதேசத்திற்கு கொண்டுசென்றுள்ளது.
சில தூதுவராலயங்கள் கூட எங்களது இந்த போராட்டம்,எங்களது வலியை,நீதிகேட்கும் படலத்தினை மழுங்கடிக்கும் வகையில் கொண்டுசெல்கின்றனர்.எங்களதுபோராட்டத்திற்கு சரியான தீர்வுத்திட்டம் வரவேண்டும்.
இவ்வாறான அநீதிகள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமாக இருந்தால் இந்தக் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எமது மக்களுக்கான அநீதி இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுள்ளமை என்பதற்கான பொறுப்புக் கூறல் இந்த அரசாங்கத்திற்கும் இருக்க வேண்டும்.
அவ்வாறான நிலையிலேயே இந்த அநியாயங்கள் மீளவும் நிகழாமல் இருக்கும்.இந்தப் பொறுப்புக் கூறல் விடயத்தை இந்த அரசாங்கம் மாத்திரமல்ல எந்த அரசாங்கள் வந்தாலும் தட்டிக் கழித்தே வருகின்றார்கள். தங்கள் இருப்புகளைத் தக்க வைப்பதற்கும், இனவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள்.
தற்போது வந்திருக்கும் ஐ.நா அறிக்கையிலும் வழங்கப்பட்டிருக்கும் கால நீடிப்பானது எமக்கு நடந்திருக்கும் இன அழிப்பினை சாதாரண ஒரு நிலைப்பாடாக முடித்து வைப்பதற்கான மென்போக்கு செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம். எனவே இவ்வாறு முயற்சிப்பவர்கள் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு சிலர் தங்களுக்குத் தேவையான நிதி வளத்தை ஈட்டிக் கொள்வதற்காக எங்கள் வலிகளோடு விளையாடுகின்றார்கள். எங்கள் உறவுகளை இழந்து நாங்கள் வேதனையில் இருக்கின்றோம். இறப்பது என்பது ஒரு வகையான விடயம் ஆனால் எங்கள் உறவுகள் இருக்கின்றார்களா இல்லையா என ஏங்கி நாங்கள் ஒவ்வொரு நாளும் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலை ஏன் சர்வதேசத்திற்கு விளங்குவதில்லை.
காசாவில் நடந்த விடயங்களை எத்தனையோ நாடுகள் பேசுகின்றன. ஆனால் இங்கு எமக்கு நடந்த, செம்மணியில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு நடந்த விடயங்களை ஏன் சர்வதேசம் பேச மறுக்கின்றது. இதற்கான ஒரு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதற்கு முன்வராமலிருப்பது எங்களுக்கு மனவேதனையான விடயம்.
தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் சில நல்ல விடயங்கள் இருந்தாலும் எங்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நாங்கள் சரவதேச விசாரணை ஒன்றையே கோரிக் கொண்டிருப்போம்.
தற்போது இரண்டு வருட கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருடங்கள் முடிவுறும் போது நாங்கள் இருப்பமோ தெரியாது. இவ்வாறு ஒவ்வொரு அரசாங்கங்கள் மாறும் போதும் அவர்களுக்குக் கால நீடிப்பினை வழங்கி பொறுப்புக் கூறலில் இருந்து அவர்களைக் காப்பாற்றி வருவதே ஐ.நா செயற்பாடாக இருக்கின்றது.
இந்த நிலையை மாற்றி இந்த அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தி நீதியான சர்வதேச விசாரணையின் ஊடாக எமக்கான ஒரு தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு ஐ.நா முன்வர வேண்டும்.
காசா தொடர்பில் பேசும் நாடுகள் ஏன் செம்மணி தொடர்பில் பேச முன்வரவில்லை - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் ஆதங்கம் காசாவில் நடந்த விடயங்களை எத்தனையோ நாடுகள் பேசுகின்றன. ஆனால் இங்கு எமக்கு நடந்த, செம்மணியில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு நடந்த விடயங்களை ஏன் சர்வதேசம் பேச மறுக்கின்றது. இதற்கான ஒரு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதற்கு முன்வராமலிருப்பது எங்களுக்கு மனவேதனையான விடயம் என கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளனர். செம்மணி மனித புதைகுழியானது தமிழின அழிப்பின் அடையாளம் எனவும் அங்கிருந்த நினைவுச்சுடர் ஏற்றும் தூபி உடைக்கப்பட்டதானது இந்த நாட்டின் இனவாத முகத்தினை காட்டி நிற்பதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.மட்டு.ஊடக அமையத்தில் இன்று காலை கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றது.அதில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களின் தலைவிகள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி, கடந்த மே மாதம் ஐநா ஆணையாளர் இலங்கைக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திவிட்டு சென்றவர்.அதேநேரம் செம்மணியில் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட மக்களின் எழும்புக்கூடுகள் தோண்டப்பட்ட நிலையில் அணையா விளக்கு என்னும் நினைவுத்தூபியினை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களாக வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் இணைந்து அங்கு அணையா விளக்கு போராட்டத்தினையும் முன்னெடுத்திருந்தனர்.அங்கு ஐநா ஆணையாளரும் வந்து வணங்கிச்சென்றிருந்தார்.அதேபோன்று கடந்த மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 01ஆம் திகதி வரையில் செம்மணிக்கு நீதிகோரிய வகையில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளினால் அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுவந்தது. அந்த நினைவுத்தூபியானது இனவாதிகளினால் கடந்த 09ஆம் திகதி உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.செம்மணியில் புதைக்கப்பட்ட ஆத்மாக்களுக்குகூட நீதி கிடைக்கக்கூடாது என்ற நோக்குடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய நினைவுத்தூபியைக்கூட வைத்து எமக்கான நீதியை கோரமுடியாத நிலையே இந்த அரசு காலகட்டத்திலும் ஏற்படுகின்றது.எமதுபோராட்ட இத்திற்கு வந்த ஐநா ஆணையாளர் எமது வலியை புரிந்துகொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்று கூறிச்சென்ற நிலையில் தற்போதைய ஐநா அமர்வில் வெளிவந்திருக்கின்ற அறிக்கையானது பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களுக்கு பாரிய ஏமாற்றத்தினையே தந்துள்ளது.கடந்தகாலத்திலிருந்து அரசுகளுக்கு வழங்கியதுபோன்று தற்போதுள்ள அரசுக்கும் கால அவகாசத்தினை வழங்கியிருக்கின்றார்கள்,மீண்டும் உள்ளக பொறிமுறையினை திணித்திருக்கின்றார்கள். சர்வதேச தரத்திலான விசாரணையொன்று வேண்டும் என்றே பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.இந்த நிலையிலேயே தற்போது வெளிவந்துள்ள அறிக்கை ஏமாற்றமளிக்கின்றது.இந்த அனுர அரசாங்கத்தினை நம்பிய ஐநா சபையானது எங்களுக்கு பாராமுகமாக இவ்வாறான விடயத்தினை செய்திருப்பதானது எங்களுக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.இந்த அரசாங்கமானது இரண்டு முகங்களை காட்டிநிற்கின்றது.சர்வதேச நாடுகளிடம் ஒரு முகத்தினை காட்டுகின்றது,இலங்கைக்கு வந்து ஒரு முகத்தினை காட்டுகின்றது.பாதிக்கப்பட்டமக்களுக்கு,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு தீர்வினை வழங்கவேண்டும்,பொறுப்புக்கூறவேண்டும் என்ற எண்ணப்பாடு இல்லாத நிலையிலேயே இந்த அரசாங்கமும் செயற்பட்டுவருகின்றது.இந்த அரசாங்கம் செம்மணி புதைகுழி விடயத்திலும் சரியான கரிசனை காட்டியதாகயில்லை.அதேபோன்று தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைத்த விடயத்திலும் எந்த கரிசனையும் காட்டப்படவில்லை.இந்த 17வருடத்தில் எங்களுக்கு கிடைக்காத நிலையில் இந்த அரசாங்கத்தின் மீது எந்த நம்பிக்கையின் கீழ் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளக பொறிமுறையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டுசென்றுள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.சர்வதேச தரத்திலான ஒரு நீதிவிசாரணையே எங்களுக்கு தேவையென நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம்.இங்கும் சில குழுக்களாக பிரிந்துகொண்டு சகோதர இனத்திற்கு நடந்ததும் எங்களுக்கு நடந்ததும் ஒரு சமநிலையான போர்க்குற்றம் என்ற நிலைக்குள் கொண்டுவருகின்றார்கள்.எங்களுக்கு நடந்ததுவேறு அவர்களுக்கு நடந்ததுவேறு.அவர்களுக்கு நடந்தது ஒரு குற்றச்செயல்.தமிழ் மக்களுக்கு நடந்தது திட்டமிட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டதும் திட்டமிட்ட இனஅழிப்பும் ஆகும்.அதனையும் இதனையும் சில குழுக்கள் சமநிலைப்படுத்தி சர்வதேசத்திற்கு கொண்டுசென்றுள்ளது.சில தூதுவராலயங்கள் கூட எங்களது இந்த போராட்டம்,எங்களது வலியை,நீதிகேட்கும் படலத்தினை மழுங்கடிக்கும் வகையில் கொண்டுசெல்கின்றனர்.எங்களதுபோராட்டத்திற்கு சரியான தீர்வுத்திட்டம் வரவேண்டும்.இவ்வாறான அநீதிகள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமாக இருந்தால் இந்தக் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எமது மக்களுக்கான அநீதி இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுள்ளமை என்பதற்கான பொறுப்புக் கூறல் இந்த அரசாங்கத்திற்கும் இருக்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே இந்த அநியாயங்கள் மீளவும் நிகழாமல் இருக்கும்.இந்தப் பொறுப்புக் கூறல் விடயத்தை இந்த அரசாங்கம் மாத்திரமல்ல எந்த அரசாங்கள் வந்தாலும் தட்டிக் கழித்தே வருகின்றார்கள். தங்கள் இருப்புகளைத் தக்க வைப்பதற்கும், இனவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள்.தற்போது வந்திருக்கும் ஐ.நா அறிக்கையிலும் வழங்கப்பட்டிருக்கும் கால நீடிப்பானது எமக்கு நடந்திருக்கும் இன அழிப்பினை சாதாரண ஒரு நிலைப்பாடாக முடித்து வைப்பதற்கான மென்போக்கு செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம். எனவே இவ்வாறு முயற்சிப்பவர்கள் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.ஒரு சிலர் தங்களுக்குத் தேவையான நிதி வளத்தை ஈட்டிக் கொள்வதற்காக எங்கள் வலிகளோடு விளையாடுகின்றார்கள். எங்கள் உறவுகளை இழந்து நாங்கள் வேதனையில் இருக்கின்றோம். இறப்பது என்பது ஒரு வகையான விடயம் ஆனால் எங்கள் உறவுகள் இருக்கின்றார்களா இல்லையா என ஏங்கி நாங்கள் ஒவ்வொரு நாளும் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலை ஏன் சர்வதேசத்திற்கு விளங்குவதில்லை.காசாவில் நடந்த விடயங்களை எத்தனையோ நாடுகள் பேசுகின்றன. ஆனால் இங்கு எமக்கு நடந்த, செம்மணியில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு நடந்த விடயங்களை ஏன் சர்வதேசம் பேச மறுக்கின்றது. இதற்கான ஒரு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதற்கு முன்வராமலிருப்பது எங்களுக்கு மனவேதனையான விடயம்.தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் சில நல்ல விடயங்கள் இருந்தாலும் எங்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நாங்கள் சரவதேச விசாரணை ஒன்றையே கோரிக் கொண்டிருப்போம். தற்போது இரண்டு வருட கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருடங்கள் முடிவுறும் போது நாங்கள் இருப்பமோ தெரியாது. இவ்வாறு ஒவ்வொரு அரசாங்கங்கள் மாறும் போதும் அவர்களுக்குக் கால நீடிப்பினை வழங்கி பொறுப்புக் கூறலில் இருந்து அவர்களைக் காப்பாற்றி வருவதே ஐ.நா செயற்பாடாக இருக்கின்றது. இந்த நிலையை மாற்றி இந்த அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தி நீதியான சர்வதேச விசாரணையின் ஊடாக எமக்கான ஒரு தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு ஐ.நா முன்வர வேண்டும்.