வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியில் இடம்பெற்றது.
குறித்த பகுதியில் கட்டாகலி மாடுகள் அங்குமிங்குமாகத் திரிவது வழக்கமானதாகும்.
குறித்த வீதியில் வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென மாடு வீதியின் குறுக்கே சென்றமையால் மாட்டுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு மாடு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான அலுவலகம் திறந்து வைப்பதற்கு சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து; இரு மாடுகள் உயிரிழப்பு கிளிநொச்சியில் சம்பவம் வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியில் இடம்பெற்றது. குறித்த பகுதியில் கட்டாகலி மாடுகள் அங்குமிங்குமாகத் திரிவது வழக்கமானதாகும். குறித்த வீதியில் வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென மாடு வீதியின் குறுக்கே சென்றமையால் மாட்டுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு மாடு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான அலுவலகம் திறந்து வைப்பதற்கு சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.