• Nov 25 2024

மகிந்த அல்ல பசில் மற்றும் கோட்டாபயவின் குடியுரிமையை பறிக்கலாம் - ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 12:18 pm
image

பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாய ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும்உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த தீர்ப்பினை கொண்டு ஒரு தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை இரத்து செய்யும் யோசனையை கொண்டு வந்தால் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டேன். 

அந்த கீழ்த்தரமான செயலுக்கு துணை செல்லமாட்டேன், ஏனெனில் மகிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளார்.

நான் அவர் பக்கம் இனி செல்ல போவதில்லை. அவருக்கும் எனக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் அவர் மீதான கௌரவம் இன்றும் உள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இன்றைய நிலைக்கு நாங்கள் யாரும் பொறுப்பல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களே அவரை இந்த நிலைக்கு தள்ளியுள்ளார்கள் என்றார்.


மகிந்த அல்ல பசில் மற்றும் கோட்டாபயவின் குடியுரிமையை பறிக்கலாம் - ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி samugammedia பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாய ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும்உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்த தீர்ப்பினை கொண்டு ஒரு தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை இரத்து செய்யும் யோசனையை கொண்டு வந்தால் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டேன். அந்த கீழ்த்தரமான செயலுக்கு துணை செல்லமாட்டேன், ஏனெனில் மகிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளார்.நான் அவர் பக்கம் இனி செல்ல போவதில்லை. அவருக்கும் எனக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் அவர் மீதான கௌரவம் இன்றும் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இன்றைய நிலைக்கு நாங்கள் யாரும் பொறுப்பல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களே அவரை இந்த நிலைக்கு தள்ளியுள்ளார்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement