நெடுங்குடியிருப்பு அறைகளில் ஒரே வீட்டில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை, அஸ்வெசும வேலைத்திட்டத்தில் தனித்தனியே உள்வாங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்டத் துறையில் உள்ள தோட்டங்களில் தனி வீடுகள் இல்லாதிருப்பதன் காரணமாகத் தோட்டத் தொழிலாளர்களின் தனிக் குடும்பங்கள் கூட்டாக ஒரே நெடுங்குடியிருப்பு வீடுகளில் வசிக்கின்றனர்.
தற்போதைய நடைமுறைக்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் வேறு வேறான குடும்ப எண்ணிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல், நெடுங்குடியிருப்பு அறைகளில் வாழ்கின்ற அனைத்து நபர்களும் ஒரு குடும்ப அலகாகக் கருதப்படுகின்றனர்.
குறித்த நிலை நிவாரண கொடுப்பனவு தெரிவின் போது அந்த குடும்பங்களுக்குப் பாதகமானது என்பது தெரியவருகிறது.
எனவே 2022ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு கட்டளைகளின் பிரகாரம், அஸ்வெசும முன்மொழிவுத் திட்டத்திற்குத் தகைமைகளை நிர்ணயிக்கும் போது தொடர்குடியியிருப்பு வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு செயலாற்றுமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கான அஸ்வெசும குறித்து வௌியான அறிவிப்பு நெடுங்குடியிருப்பு அறைகளில் ஒரே வீட்டில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை, அஸ்வெசும வேலைத்திட்டத்தில் தனித்தனியே உள்வாங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.பெருந்தோட்டத் துறையில் உள்ள தோட்டங்களில் தனி வீடுகள் இல்லாதிருப்பதன் காரணமாகத் தோட்டத் தொழிலாளர்களின் தனிக் குடும்பங்கள் கூட்டாக ஒரே நெடுங்குடியிருப்பு வீடுகளில் வசிக்கின்றனர்.தற்போதைய நடைமுறைக்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் வேறு வேறான குடும்ப எண்ணிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல், நெடுங்குடியிருப்பு அறைகளில் வாழ்கின்ற அனைத்து நபர்களும் ஒரு குடும்ப அலகாகக் கருதப்படுகின்றனர். குறித்த நிலை நிவாரண கொடுப்பனவு தெரிவின் போது அந்த குடும்பங்களுக்குப் பாதகமானது என்பது தெரியவருகிறது. எனவே 2022ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு கட்டளைகளின் பிரகாரம், அஸ்வெசும முன்மொழிவுத் திட்டத்திற்குத் தகைமைகளை நிர்ணயிக்கும் போது தொடர்குடியியிருப்பு வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு செயலாற்றுமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.