• Apr 20 2025

உயர் நீதிமன்றினால் கோட்டாவுக்கு நோட்டீஸ்

Tharun / May 17th 2024, 7:28 pm
image

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஐந்து வயதுக் குழந்தை உட்பட எட்டு இடம்பெயர்ந்த பொதுமக்களை வெட்டிக் கொன்ற வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றினால் கோட்டாவுக்கு நோட்டீஸ் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.2000 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஐந்து வயதுக் குழந்தை உட்பட எட்டு இடம்பெயர்ந்த பொதுமக்களை வெட்டிக் கொன்ற வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement