• Jun 14 2025

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு!

Chithra / Jun 13th 2025, 12:42 pm
image


நுவரெலியா ஹட்டன் பதுளை பிரதான வீதியில் சினிசிட்டா மைதானத்தின் முன் பகுதியில் மரம் முறிந்து மின் கம்பியில் விழுந்ததன் காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் தொடர்ந்து சீரற்ற காலைநிலை காரணமாக மழையுடனான கடுமையான காற்றும் வீசி வருகிறது. 

இதனால் இன்று அதிகாலை வீசிய காற்று காரணமாக நுவரெலியா - பதுளை வீதியில் உள்ள மரம் முறிந்து விழுந்துள்ளது. தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்றுள்ளது 

ஆகவே, வாகன சாரதிகளும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்தும் படி பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வீதியில் விழுத்த மரத்தினை அகற்ற பிரதேச வாசிகளும் பொலிஸ் அதிகாரிகளும்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு நுவரெலியா ஹட்டன் பதுளை பிரதான வீதியில் சினிசிட்டா மைதானத்தின் முன் பகுதியில் மரம் முறிந்து மின் கம்பியில் விழுந்ததன் காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நுவரெலியாவில் தொடர்ந்து சீரற்ற காலைநிலை காரணமாக மழையுடனான கடுமையான காற்றும் வீசி வருகிறது. இதனால் இன்று அதிகாலை வீசிய காற்று காரணமாக நுவரெலியா - பதுளை வீதியில் உள்ள மரம் முறிந்து விழுந்துள்ளது. தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்றுள்ளது ஆகவே, வாகன சாரதிகளும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்தும் படி பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.வீதியில் விழுத்த மரத்தினை அகற்ற பிரதேச வாசிகளும் பொலிஸ் அதிகாரிகளும்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement