• May 09 2024

போராட்டத்தில் குதித்த நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள்! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 9:27 am
image

Advertisement

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்  உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும், முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தினை அதிகரிக்கவும், வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறைக்கவும், ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வான் உயரத்தில் பண வீக்கம் நடுவீதியில் உத்தியோகஸ்தர்கள் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டத்தினை அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி பாரியளவில் முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலயம் வைத்தியசாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது .


போராட்டத்தில் குதித்த நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் SamugamMedia நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்  உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும், முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தினை அதிகரிக்கவும், வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறைக்கவும், ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வான் உயரத்தில் பண வீக்கம் நடுவீதியில் உத்தியோகஸ்தர்கள் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டத்தினை அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி பாரியளவில் முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.இப்போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலயம் வைத்தியசாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement