• Oct 30 2024

கமலா ஹரிஸுக்கு அதிகாரபூர்வமாக ஒப்புதலளித்தார் ஒபாமா

Tharun / Jul 26th 2024, 6:59 pm
image

Advertisement

ஜனநாயகக் கட்சியின்  முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்றைய தினம் (25) அன்று துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதை இருவரும்  கமலா ஹாரிஸிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோவையும் பராக் ஒபாமா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜூலை 22 அன்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தனது ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரித்தார்.

ஜூலை 23 அன்று, கமலா ஜனாதிபதி வேட்பாளராக ஆவதற்கு ஜனநாயகக் கட்சியிலிருந்து தேவையான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றார்.

ஆனால், கமலா ஹாரிஸ் குறித்து ஒபாமா அமைதி காத்தார். அவர் தனது மனைவி மிச்செல் ஒபாமாவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்தன.

ஆனால், ஜோ பைடன் பின்வாங்கிய 4 நாட்களுக்குப் பிறகு இன்று கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார் ஒபாமா.

கமலா ஹாரிஸ் வெற்றியை உறுதி செய்ய முடிந்த அனைத்தையும் செய்வேன் - ஒபாமா  

பராக் மற்றும் மிச்செல் ஒபாமா இருவரும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை அழைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பராக் ஒபாமா கமலா ஹாரிஸிடம், மிச்செலும் நானும் உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், இந்தத் தேர்தலில் உங்களை வெற்றிபெறச் செய்து வெள்ளை மாளிகைக்கு வருவதற்கும் எல்லாவற்றையும் செய்வோம் என உறுதியளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், தனக்கு ஆதரவளித்த ஒபாமா தம்பதியினருக்கு நன்றி தெரிவித்ததோடு, தங்களின் பல தசாப்த கால நட்புக்கு நன்றியும் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சி அடுத்த மாதம் ஆகஸ்ட் முதலாம் திகதி ஒரு தேசிய மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது, அதில் கமலா ஹாரிஸ் முறையான வேட்பாளராக அறிவிக்க வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கமலா ஹரிஸுக்கு அதிகாரபூர்வமாக ஒப்புதலளித்தார் ஒபாமா ஜனநாயகக் கட்சியின்  முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்றைய தினம் (25) அன்று துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்தார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதை இருவரும்  கமலா ஹாரிஸிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோவையும் பராக் ஒபாமா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜூலை 22 அன்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தனது ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரித்தார்.ஜூலை 23 அன்று, கமலா ஜனாதிபதி வேட்பாளராக ஆவதற்கு ஜனநாயகக் கட்சியிலிருந்து தேவையான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றார்.ஆனால், கமலா ஹாரிஸ் குறித்து ஒபாமா அமைதி காத்தார். அவர் தனது மனைவி மிச்செல் ஒபாமாவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்தன.ஆனால், ஜோ பைடன் பின்வாங்கிய 4 நாட்களுக்குப் பிறகு இன்று கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார் ஒபாமா.கமலா ஹாரிஸ் வெற்றியை உறுதி செய்ய முடிந்த அனைத்தையும் செய்வேன் - ஒபாமா  பராக் மற்றும் மிச்செல் ஒபாமா இருவரும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை அழைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பராக் ஒபாமா கமலா ஹாரிஸிடம், மிச்செலும் நானும் உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், இந்தத் தேர்தலில் உங்களை வெற்றிபெறச் செய்து வெள்ளை மாளிகைக்கு வருவதற்கும் எல்லாவற்றையும் செய்வோம் என உறுதியளித்துள்ளார்.இதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், தனக்கு ஆதரவளித்த ஒபாமா தம்பதியினருக்கு நன்றி தெரிவித்ததோடு, தங்களின் பல தசாப்த கால நட்புக்கு நன்றியும் தெரிவித்தார்.ஜனநாயகக் கட்சி அடுத்த மாதம் ஆகஸ்ட் முதலாம் திகதி ஒரு தேசிய மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது, அதில் கமலா ஹாரிஸ் முறையான வேட்பாளராக அறிவிக்க வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement