• Apr 17 2026

திருத்தந்தை லியோவுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ அழைப்பு

Chithra / Mar 3rd 2026, 8:34 pm
image

 பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (02) வத்திக்கானில் வைத்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழைக் கையளித்துள்ளார். 

வத்திக்கானின் அரசுகளுடனான உறவுகளுக்கான பிரதிச் செயலாளர் மிஹைட்டா பிளாஜிடம் (Msgr. Mihăiță Blaj)  இந்த அழைப்பு கையளிக்கப்பட்டது.

திருத்தந்தையின் இந்த வருகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் மத ரீதியான உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

திருத்தந்தை லியோவுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ அழைப்பு  பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (02) வத்திக்கானில் வைத்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழைக் கையளித்துள்ளார். வத்திக்கானின் அரசுகளுடனான உறவுகளுக்கான பிரதிச் செயலாளர் மிஹைட்டா பிளாஜிடம் (Msgr. Mihăiță Blaj)  இந்த அழைப்பு கையளிக்கப்பட்டது.திருத்தந்தையின் இந்த வருகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் மத ரீதியான உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement