• Dec 12 2024

பக்கத்து வீட்டு மாடியில் : சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!

Tharmini / Dec 11th 2024, 1:12 pm
image

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் பக்கத்து வீட்டு மொட்டமாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது , பத்து வயதான சிறுவன் ஒரு வாரமாக அம்மை நோயினால் பாாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளான். 

நேற்று (10) பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற காரணத்தினால் சிறுவன் தனிமையில் இருந்துள்ளனான். 

பின்னர் பெற்றோர்கள் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த சிறுவன் காணாமல் போயுள்ளான். 

எங்கு தேடியும் கிடைக்காததால் பொலிஸில் அவனது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டிற்கிணங்க  வழக்குப் பதிவு செய்த பொலிஸார் காணாமல் போன சிறுவனை தேடிய போது பக்கத்து வீட்டு மாடியில் சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளான். 

சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

ஆனால் முன்னரே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும் சிறுவன் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் உள்ளிட்டவை காணாமல் போயுள்ளது. 

அதனால்  இது கொலையா? நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளானா? என  பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பக்கத்து வீட்டு மாடியில் : சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் பக்கத்து வீட்டு மொட்டமாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது , பத்து வயதான சிறுவன் ஒரு வாரமாக அம்மை நோயினால் பாாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளான். நேற்று (10) பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற காரணத்தினால் சிறுவன் தனிமையில் இருந்துள்ளனான். பின்னர் பெற்றோர்கள் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த சிறுவன் காணாமல் போயுள்ளான். எங்கு தேடியும் கிடைக்காததால் பொலிஸில் அவனது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.முறைப்பாட்டிற்கிணங்க  வழக்குப் பதிவு செய்த பொலிஸார் காணாமல் போன சிறுவனை தேடிய போது பக்கத்து வீட்டு மாடியில் சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளான். சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் முன்னரே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுவன் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் உள்ளிட்டவை காணாமல் போயுள்ளது. அதனால்  இது கொலையா நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளானா என  பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement