• Nov 22 2024

போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மன்னாரில் இடம்பெற்ற மரதனோட்டப் போட்டி...!

Sharmi / May 31st 2024, 4:35 pm
image

"நண்பா ! போதைக்கும் புகைத்தலிற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில்  சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு  தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சமுர்த்தி  அபிவிருத்தி திணைக்களம்  ஏற்பாடு செய்த மாபெரும்  மரதனோட்டப் போட்டி இன்று(31) காலை 7 மணி அளவில் மன்னார்  மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து தாராபுரம்   ஊடாக சென்று மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்  கலந்து கொண்டிருந்தார்.

மரதன் ஓட்டப் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்த வீரர்களுக்கு சான்றிதழ்களும்  பணப்பரிசில்கள் மாவட்ட செயலாளரினால்  வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது மன்னார் சாந்திபுரம் பகுதியை சேர்ந்த யோகனாதன்  ஜெபாகுமார் முதலிடத்தை தனதாக்கி கொண்டார்

மேலும்,  இந்நிகழ்வில்  மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் , உட்பட பிரதம உள்ளக  கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ,சமுர்த்தி திணைக்கள  முகாமையாளர், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


 


போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மன்னாரில் இடம்பெற்ற மரதனோட்டப் போட்டி. "நண்பா போதைக்கும் புகைத்தலிற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில்  சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு  தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சமுர்த்தி  அபிவிருத்தி திணைக்களம்  ஏற்பாடு செய்த மாபெரும்  மரதனோட்டப் போட்டி இன்று(31) காலை 7 மணி அளவில் மன்னார்  மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து தாராபுரம்   ஊடாக சென்று மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்  கலந்து கொண்டிருந்தார்.மரதன் ஓட்டப் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்த வீரர்களுக்கு சான்றிதழ்களும்  பணப்பரிசில்கள் மாவட்ட செயலாளரினால்  வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது மன்னார் சாந்திபுரம் பகுதியை சேர்ந்த யோகனாதன்  ஜெபாகுமார் முதலிடத்தை தனதாக்கி கொண்டார்மேலும்,  இந்நிகழ்வில்  மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் , உட்பட பிரதம உள்ளக  கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ,சமுர்த்தி திணைக்கள  முகாமையாளர், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement