• Aug 15 2025

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

gun
shanuja / Aug 15th 2025, 2:06 pm
image

மினுவாங்கொடையில் T -56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


 சந்தேக நபரிடம் இருந்து T56 ரக துப்பாக்கி, மகசின் மற்றும் 14 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மகசின், 2.5 மில்லிமீற்றர் தோட்டாக்களின் 9 சுற்றுகள், 9 மில்லிமீற்றர் தோட்டாக்களின் 9 சுற்றுகள், 3 வாள்கள் மற்றும் 2 கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


சான்றுப் பொருள்களுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது மினுவாங்கொடையில் T -56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து T56 ரக துப்பாக்கி, மகசின் மற்றும் 14 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மகசின், 2.5 மில்லிமீற்றர் தோட்டாக்களின் 9 சுற்றுகள், 9 மில்லிமீற்றர் தோட்டாக்களின் 9 சுற்றுகள், 3 வாள்கள் மற்றும் 2 கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.சான்றுப் பொருள்களுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement