• Jan 14 2026

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்..!samugammedia

dileesiya / Jan 9th 2024, 3:20 pm
image

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையினை அண்மித்த பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்  வீதியின் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள்  வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட  மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளமையுடன் இரு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்.samugammedia வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையினை அண்மித்த பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா - மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்  வீதியின் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள்  வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட  மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளமையுடன் இரு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement