• Oct 24 2024

அமெரிக்காவில் விமானம் இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Jun 26th 2023, 6:03 pm
image

Advertisement

அமெரிக்காவில் பயணிகள் விமானம் இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 1111 என்ற விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பின்னர், மேற்கண்ட ஏ319 விமானம் விமான நிலையத்தின் வாயில் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இன்ஜின் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது.

மேலும்  விமான ஊழியர் ஒருவர், மேற்படி விமான என்ஜினின் சுழல்விசையினால் உள்ளிழுக்கப்பட்டு, என்ஜினில் சிக்கி அவர் உயிரிழந்தார் என அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

டெல்டா ஏர்லைன்ஸ் இந்தச் சம்பவம் தொர்டபில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

குறித்த இந்தச் சம்பவம் தொர்டபில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பது குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் ஆரம்ப விசாரணையில் இருந்து, இந்த சம்பவம் யூனிஃபையின் செயல்பாட்டு நடைமுறைகள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கொள்கைகளுடன் தொடர்பில்லாதது. இறந்தவருக்கு மரியாதை நிமித்தமாக, நாங்கள் எந்த கூடுதல் தகவலையும் பகிர்ந்து கொள்ள மாட்டோம், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. NTSB விசாரணையில் சேர்ந்துள்ளது மேலும் வரும் நாட்களில் கூடுதல் விவரங்களுடன் ஆரம்ப அறிக்கையை வெளியிடலாம். என்றும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் விமானம் இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு samugammedia அமெரிக்காவில் பயணிகள் விமானம் இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 1111 என்ற விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து விமான நிலையத்தில் தரையிறங்கியது.பின்னர், மேற்கண்ட ஏ319 விமானம் விமான நிலையத்தின் வாயில் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இன்ஜின் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது.மேலும்  விமான ஊழியர் ஒருவர், மேற்படி விமான என்ஜினின் சுழல்விசையினால் உள்ளிழுக்கப்பட்டு, என்ஜினில் சிக்கி அவர் உயிரிழந்தார் என அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.டெல்டா ஏர்லைன்ஸ் இந்தச் சம்பவம் தொர்டபில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.குறித்த இந்தச் சம்பவம் தொர்டபில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பது குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.“எங்கள் ஆரம்ப விசாரணையில் இருந்து, இந்த சம்பவம் யூனிஃபையின் செயல்பாட்டு நடைமுறைகள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கொள்கைகளுடன் தொடர்பில்லாதது. இறந்தவருக்கு மரியாதை நிமித்தமாக, நாங்கள் எந்த கூடுதல் தகவலையும் பகிர்ந்து கொள்ள மாட்டோம், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. NTSB விசாரணையில் சேர்ந்துள்ளது மேலும் வரும் நாட்களில் கூடுதல் விவரங்களுடன் ஆரம்ப அறிக்கையை வெளியிடலாம். என்றும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement