• Nov 28 2024

மட்டக்களப்பில் கோர விபத்து - ஒருவர் பலி..! மூவர் படுகாயம்

Chithra / Jan 17th 2024, 7:39 am
image



மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில்ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த பாவூர்தி ஒன்றும், களுவாஞ்சிக்குடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்த ஏனையோரும் மண்டூர் மற்றும் எருவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை 

முன்னெடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களையும், மேலதிக விசாரணைகளுக்காக காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பில் கோர விபத்து - ஒருவர் பலி. மூவர் படுகாயம் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில்ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த பாவூர்தி ஒன்றும், களுவாஞ்சிக்குடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன.இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர் மண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்த ஏனையோரும் மண்டூர் மற்றும் எருவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களையும், மேலதிக விசாரணைகளுக்காக காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement