• Nov 28 2024

ஒரு லட்டு 36 லட்சத்திற்கு ஏலம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா..?

Tamil nila / Sep 17th 2024, 8:58 pm
image

ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத், மாதாப்பூர் பகுதிகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.

இந்த விழாவில் பாலாபூரில் வைக்கப்படும் விநாயகர் சிலை தனித்துவம் பெற்றது. அங்கு வைக்கப்படும் விநாயகருக்கு படைக்கப்படும் லட்டு ஏலத்தில் விடப்படுகிறது. 

அந்த ஒரு லட்டு பல லட்சம் ரூபாய்க்கு ஆண்டு தோறும் ஏலமாகிறது.

முதல் முதலில் இந்த ஏலம் 1994ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. அப்போது அந்த லட்டு ரூ.450-க்கு ஏலமானது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் போட்டி போட்டு லட்சக் கணக்கில் பணத்தை கொடுத்து வாங்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நல்கொண்டா நகரம் விநாயகர் பூஜையில் கடந்த ஆண்டு ரூ.36 லட்சத்தை எட்டி, புகழ்பெற்ற பாலாபூர் லட்டு ஏலத்தை மிஞ்சியுள்ளது. ​​ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் தங்களது வாழ்க்கையில் நாளுக்கு நாள் எல்லா வகையிலும் முன்னேறி வருகிறார்கள் என நம்பப்படுகிறது.

இம்முறை இம் மாதம் 17ஆம் தேதி வல்லபபுரத்தில் உள்ள செருவூரில் விசர்ஜன விழா நடத்த உள்ளதாக கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். அதே நாளில் லட்டுவும் ஏலம் விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஒரு லட்டு 36 லட்சத்திற்கு ஏலம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா. ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத், மாதாப்பூர் பகுதிகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.இந்த விழாவில் பாலாபூரில் வைக்கப்படும் விநாயகர் சிலை தனித்துவம் பெற்றது. அங்கு வைக்கப்படும் விநாயகருக்கு படைக்கப்படும் லட்டு ஏலத்தில் விடப்படுகிறது. அந்த ஒரு லட்டு பல லட்சம் ரூபாய்க்கு ஆண்டு தோறும் ஏலமாகிறது.முதல் முதலில் இந்த ஏலம் 1994ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. அப்போது அந்த லட்டு ரூ.450-க்கு ஏலமானது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் போட்டி போட்டு லட்சக் கணக்கில் பணத்தை கொடுத்து வாங்க தொடங்கியுள்ளது.இந்நிலையில், நல்கொண்டா நகரம் விநாயகர் பூஜையில் கடந்த ஆண்டு ரூ.36 லட்சத்தை எட்டி, புகழ்பெற்ற பாலாபூர் லட்டு ஏலத்தை மிஞ்சியுள்ளது. ​​ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் தங்களது வாழ்க்கையில் நாளுக்கு நாள் எல்லா வகையிலும் முன்னேறி வருகிறார்கள் என நம்பப்படுகிறது.இம்முறை இம் மாதம் 17ஆம் தேதி வல்லபபுரத்தில் உள்ள செருவூரில் விசர்ஜன விழா நடத்த உள்ளதாக கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். அதே நாளில் லட்டுவும் ஏலம் விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement