• Sep 20 2024

10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்! வரிசைக்கும் முற்றுப்புள்ளி - கூறுகின்றார் நாமல்

Chithra / Aug 25th 2024, 9:20 am
image

Advertisement

  

பணவீக்கத்துக்கு ஏற்ப அரச பணியாளர்களுக்கான வேதனத்தை அதிகரிக்கக்கூடியதொரு பொறிமுறை உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

திவுலப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் ஏற்பட்டிருந்தன. 

எனினும் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான வரிசைகளை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. 

அதற்காகத் தொழில்நுட்பத்துடன் இணைந்த புதிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும். 

தேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளில் வேதனங்களை அதிகரிப்பதாக வாக்குறுதியளிக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.  

அத்துடன் எதிர்வரும் 5 வருடங்களில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் வரிசைக்கும் முற்றுப்புள்ளி - கூறுகின்றார் நாமல்   பணவீக்கத்துக்கு ஏற்ப அரச பணியாளர்களுக்கான வேதனத்தை அதிகரிக்கக்கூடியதொரு பொறிமுறை உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் ஏற்பட்டிருந்தன. எனினும் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான வரிசைகளை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. அதற்காகத் தொழில்நுட்பத்துடன் இணைந்த புதிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும். தேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளில் வேதனங்களை அதிகரிப்பதாக வாக்குறுதியளிக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.  அத்துடன் எதிர்வரும் 5 வருடங்களில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement