• Mar 26 2025

வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஒரு வயது குழந்தை; திருமலையில் துயரம்

Chithra / Mar 25th 2025, 7:51 am
image

 

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் 08ம் வாய்க்கால் பகுதியில் குழந்தையொன்று வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்து உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது. 

ஒரு வயதும் எட்டுமாதமுமான  மிஹ்ரான் இசான் என்ற  குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகிறது.

வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ள குழந்தையை தேடியபோது சுமார் 100 மீற்றர் தூரத்தில் நீரால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஒரு வயது குழந்தை; திருமலையில் துயரம்  திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் 08ம் வாய்க்கால் பகுதியில் குழந்தையொன்று வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்து உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது. ஒரு வயதும் எட்டுமாதமுமான  மிஹ்ரான் இசான் என்ற  குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகிறது.வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ள குழந்தையை தேடியபோது சுமார் 100 மீற்றர் தூரத்தில் நீரால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.உயிரிழந்த குழந்தையின் சடலம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement