• Mar 26 2025

கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி கொடூரமாக தாக்கிய கும்பல் - யாழில் நடந்த கொடூரம்

Thansita / Mar 24th 2025, 11:28 pm
image


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் நேற்றிரவு  10 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் 

சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது 

தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயர்  கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார்

இந் நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். 

மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றுனை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் திருடப்பட்தாக கருதி குறித்த 10. வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்

பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்ர்.

இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது

குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி கொடூரமாக தாக்கிய கும்பல் - யாழில் நடந்த கொடூரம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் நேற்றிரவு  10 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயர்  கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார்இந் நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றுனை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் திருடப்பட்தாக கருதி குறித்த 10. வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்ர்.இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளதுகுறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement