• Dec 31 2024

லொறியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது பெண் குழந்தை

Chithra / Dec 29th 2024, 9:44 am
image

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.

குழந்தை, தாய் மற்றும் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த லொறியொன்று புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இதேவேளை மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள  ரயில் கடவைக்கு அருகில் இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்.

உயிரிழந்தவரின் மனைவி முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லொறியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது பெண் குழந்தை ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.இந்த விபத்து சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.குழந்தை, தாய் மற்றும் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த லொறியொன்று புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்றிரவு அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள  ரயில் கடவைக்கு அருகில் இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்.உயிரிழந்தவரின் மனைவி முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement