• Nov 26 2024

இலங்கையில் வெங்காய விலையில் மீண்டும் சிக்கல் - விவசாயிகள் கவலை

Chithra / Oct 4th 2024, 1:07 pm
image


அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் பாரிய வெங்காயம் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த சந்தை விலை சுமார் 156, 160, 170 ரூபாவாக உள்ளமை வருத்தமளிக்கும் நிலை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு வெங்காயமானது குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் தமக்கு இலாபம் இல்லை எனவும் இதனால் பயிர்ச்செய்கைக்காக பெற்ற கடனைக் கூட செலுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், வெளிநாட்டில் இருந்து பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்வதால், உள்ளுர் பெரிய வெங்காயத்திற்கு விலை இல்லை எனவும், இதனால், தொழிலில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் வெங்காய விலையில் மீண்டும் சிக்கல் - விவசாயிகள் கவலை அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் பாரிய வெங்காயம் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த சந்தை விலை சுமார் 156, 160, 170 ரூபாவாக உள்ளமை வருத்தமளிக்கும் நிலை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்வாறு வெங்காயமானது குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் தமக்கு இலாபம் இல்லை எனவும் இதனால் பயிர்ச்செய்கைக்காக பெற்ற கடனைக் கூட செலுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும், வெளிநாட்டில் இருந்து பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்வதால், உள்ளுர் பெரிய வெங்காயத்திற்கு விலை இல்லை எனவும், இதனால், தொழிலில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement