• May 19 2024

ஏற்றுமதி தடையால் நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்..!

Chithra / Mar 25th 2024, 1:28 pm
image

Advertisement



வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா காலவரையின்றி நீடிப்பதால், நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் இந்தியா விதித்த தடை வரும் 31ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது.

இந்த நாட்டில் வெங்காயத்தின் வருடாந்த நுகர்வு சுமார் 250,000 மெட்ரிக் டன்கள் மற்றும் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியா விதித்துள்ள இந்த தடையால் பல நாடுகளில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில்,

ஏற்கனவே இலங்கை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 600 முதல் 700 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 375 ரூபா தொடக்கம் 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் நுகர்வோருக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்தார்.

ஏற்றுமதி தடையால் நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம். வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா காலவரையின்றி நீடிப்பதால், நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டிசம்பரில் இந்தியா விதித்த தடை வரும் 31ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது.இந்த நாட்டில் வெங்காயத்தின் வருடாந்த நுகர்வு சுமார் 250,000 மெட்ரிக் டன்கள் மற்றும் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.இந்தியா விதித்துள்ள இந்த தடையால் பல நாடுகளில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில்,ஏற்கனவே இலங்கை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 600 முதல் 700 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 375 ரூபா தொடக்கம் 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் நுகர்வோருக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement