• Sep 22 2024

புத்தளம் தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறப்பு...!samugammedia

Anaath / Oct 15th 2023, 5:55 pm
image

Advertisement

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இன்று (15) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தெதுரு ஓயா பகுதிகளில் பெய்து வரும் மழை கடும் மழை காரணமாக இன்று காலை நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் நிலையில்  உள்ளதாகவும் பொறியியலாளர் கூறியுள்ளார்.

குறித்த நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர்மட்டம் 70.61 மீட்டராக உள்ளதுடன், இதன் வெளியேற்ற அளவு 70.79 மீட்டராகவும் காணப்படுகிறது.

இந்த நிலையில், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 8400 கன அடி வீதம் நீர் வெளியேறுவதாகவும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நீர் வெளியேறுவதால் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு கீழே உள்ள பகுதிகளுக்கு வெள்ள அனர்த்தம் ஏற்படாது என்றும் பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தளம் தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறப்பு.samugammedia தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இன்று (15) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக தெதுரு ஓயா பகுதிகளில் பெய்து வரும் மழை கடும் மழை காரணமாக இன்று காலை நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் நிலையில்  உள்ளதாகவும் பொறியியலாளர் கூறியுள்ளார்.குறித்த நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர்மட்டம் 70.61 மீட்டராக உள்ளதுடன், இதன் வெளியேற்ற அளவு 70.79 மீட்டராகவும் காணப்படுகிறது.இந்த நிலையில், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 8400 கன அடி வீதம் நீர் வெளியேறுவதாகவும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு நீர் வெளியேறுவதால் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு கீழே உள்ள பகுதிகளுக்கு வெள்ள அனர்த்தம் ஏற்படாது என்றும் பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement