• Nov 24 2024

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...! விவசாய நிலங்கள் பாதிப்பு...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 2:44 pm
image

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் பழைய எலுவாங்குளம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

நாட்டில் பெய்து வரும் மழையின் காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் - மன்னார் வீதியின் பழைய எலுவாங்குளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் பழைய எலுவாங்குளம் பிராதன வீதியிலிருந்து கலா ஓயா பாலம் வரை சுமார் மூன்று கிலோமீற்றர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பெற்றுள்ளது. 

 பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் அப்பகுதியிகுள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அத்துடன் பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த 600 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு. விவசாய நிலங்கள் பாதிப்பு.samugammedia இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் பழைய எலுவாங்குளம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.நாட்டில் பெய்து வரும் மழையின் காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் - மன்னார் வீதியின் பழைய எலுவாங்குளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதனால் பழைய எலுவாங்குளம் பிராதன வீதியிலிருந்து கலா ஓயா பாலம் வரை சுமார் மூன்று கிலோமீற்றர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பெற்றுள்ளது.  பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் அப்பகுதியிகுள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.அத்துடன் பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த 600 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement