• May 17 2024

இருபது இலட்சம் ரூபாய் செலவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு!

Tamil nila / Dec 28th 2022, 10:57 pm
image

Advertisement

பொகவந்தலாவ,நோர்வூட், மஸ்கெலியா வாழ் மக்கள் ஆயுர்வேத வைத்திய தேவைக்காக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலையே காணப்பட்டது.


மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு அமைவாக நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் நகரில் முதற்கட்டமாக ஆயுர்வேத வைத்தியசாலையினை திறந்து வைத்ததுடன்,அதற்கான வைத்தியர் ஒருவரையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.அதனூடாக தற்போது மக்கள் இலவசமாக வைத்திய சேவைகளை பெற்று பயனடைகின்றனர்.


அதனை தொடர்ந்து தற்போது நோர்வூட் பிரதேச சபையின் கீழ் எனது ஆலோசனைக்கமைய, 2000000.00 ரூபா நிதி ஒதுக்கீட்டில் பொகவந்தலாவ நகரில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினை 27.12.2022 திறந்து வைக்கப்பட்டது.


இதன் மூலம் பொகவந்தலாவ பிரதேசத்திற்குட்பட்ட 35 பிரிவுகளில் உள்ள மக்கள் இலவசமாக ஆயுர்வேத வைத்திய சேவையினை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.


இந்நிகழ்வில் நோர்வூட் பிரதேச சபை உப தலைவர் ,செயலாளர்,பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,பொகவந்தலாவ வைத்தியசாலை MOH அதிகாரி, நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்கள்,பாடசாலை அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என சகலரும் கலந்து கொண்டனர்.

இருபது இலட்சம் ரூபாய் செலவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு பொகவந்தலாவ,நோர்வூட், மஸ்கெலியா வாழ் மக்கள் ஆயுர்வேத வைத்திய தேவைக்காக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலையே காணப்பட்டது.மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு அமைவாக நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் நகரில் முதற்கட்டமாக ஆயுர்வேத வைத்தியசாலையினை திறந்து வைத்ததுடன்,அதற்கான வைத்தியர் ஒருவரையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.அதனூடாக தற்போது மக்கள் இலவசமாக வைத்திய சேவைகளை பெற்று பயனடைகின்றனர்.அதனை தொடர்ந்து தற்போது நோர்வூட் பிரதேச சபையின் கீழ் எனது ஆலோசனைக்கமைய, 2000000.00 ரூபா நிதி ஒதுக்கீட்டில் பொகவந்தலாவ நகரில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினை 27.12.2022 திறந்து வைக்கப்பட்டது.இதன் மூலம் பொகவந்தலாவ பிரதேசத்திற்குட்பட்ட 35 பிரிவுகளில் உள்ள மக்கள் இலவசமாக ஆயுர்வேத வைத்திய சேவையினை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.இந்நிகழ்வில் நோர்வூட் பிரதேச சபை உப தலைவர் ,செயலாளர்,பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,பொகவந்தலாவ வைத்தியசாலை MOH அதிகாரி, நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்கள்,பாடசாலை அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என சகலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement