• Nov 26 2024

ரஜரட்ட பல்கலைகழகத்தில் புதிய தொழில்நுட்ப பீடம் திறப்பு

Chithra / Oct 2nd 2024, 2:00 pm
image

 

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய தொழில்நுட்ப பீடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனித வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பணிப்பாளர் டகஃபுமி கடோனோ  ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனித வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய பீடத்தின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதற்காக 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

புதிய பீடம் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளதுடன், 800 இருக்கைகள் கொண்ட அரங்கம், 3 அடுக்கு நூலகம், பல விரிவுரை அரங்குகள், அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் சந்திப்பு அறைகள் கொண்டுள்ளது.

குறித்த பீடத்தின் கீழ், உயிரிச் செயலாக்க தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், தகவல்- தொடர்பாடல்; மற்றும் பொருட்கள் தொழில்நுட்பம் ஆகிய 05 கல்வித் துறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


ரஜரட்ட பல்கலைகழகத்தில் புதிய தொழில்நுட்ப பீடம் திறப்பு  இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய தொழில்நுட்ப பீடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனித வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பணிப்பாளர் டகஃபுமி கடோனோ  ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனித வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய பீடத்தின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதற்காக 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.புதிய பீடம் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளதுடன், 800 இருக்கைகள் கொண்ட அரங்கம், 3 அடுக்கு நூலகம், பல விரிவுரை அரங்குகள், அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் சந்திப்பு அறைகள் கொண்டுள்ளது.குறித்த பீடத்தின் கீழ், உயிரிச் செயலாக்க தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், தகவல்- தொடர்பாடல்; மற்றும் பொருட்கள் தொழில்நுட்பம் ஆகிய 05 கல்வித் துறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement