• Nov 26 2024

அரச உத்தியோகத்தர்கள் தாய்லாந்துக்கு செல்லும் சந்தர்ப்பம்! வெளியான விசேட அறிவிப்பு

Chithra / May 12th 2024, 8:08 am
image

 

அரச உத்தியோகத்தர்களை தாய்லாந்திற்கு தற்காலிக நியமனத்திற்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று சமய மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதே அதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு இலங்கையில் பௌத்த சமூகத்தினருக்காக விசேட தற்காலிக அர்ச்சனை திட்டத்தை நடைமுறைப்படுத்த தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, தாய்லாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 15 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பௌத்த மத, கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஆன்லைன் முறையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் தாய்லாந்துக்கு செல்லும் சந்தர்ப்பம் வெளியான விசேட அறிவிப்பு  அரச உத்தியோகத்தர்களை தாய்லாந்திற்கு தற்காலிக நியமனத்திற்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.தாய்லாந்து அரசரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று சமய மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதே அதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஆண்டு இலங்கையில் பௌத்த சமூகத்தினருக்காக விசேட தற்காலிக அர்ச்சனை திட்டத்தை நடைமுறைப்படுத்த தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இதற்கமைய, தாய்லாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 15 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பௌத்த மத, கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஆன்லைன் முறையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement