• Oct 24 2024

பண்டிகை காலத்தில் சிறைக்கைதிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு..!

Chithra / Apr 9th 2024, 8:01 am
image

Advertisement

  

ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்கு பார்வையாளர்களைக் காண்பிக்கும் வேலைத்திட்டம் அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ரமழான் பண்டிகைக்காக சிறையில் உள்ள இஸ்லாமிய மதக் கைதிகளுக்கு மட்டும் இம்மாதம் 11ஆம் திகதி பார்வையாளர்களைக் காட்டும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அத்தோடு, தற்போதுள்ள விதிமுறைகள், முறையான சுகாதார, பாதுகாப்பு முறைகளின்படி, கைதிகளின் உறவினர்களுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை மாத்திரம் வழங்குவதற்கு அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலத்தில் சிறைக்கைதிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு.   ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்கு பார்வையாளர்களைக் காண்பிக்கும் வேலைத்திட்டம் அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.ரமழான் பண்டிகைக்காக சிறையில் உள்ள இஸ்லாமிய மதக் கைதிகளுக்கு மட்டும் இம்மாதம் 11ஆம் திகதி பார்வையாளர்களைக் காட்டும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அத்தோடு, தற்போதுள்ள விதிமுறைகள், முறையான சுகாதார, பாதுகாப்பு முறைகளின்படி, கைதிகளின் உறவினர்களுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை மாத்திரம் வழங்குவதற்கு அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement