• Nov 25 2024

மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்பு; அமைதியின்மையை ஏற்படுத்திய 13 பேர் கைது..!

Chithra / Jun 26th 2024, 8:50 am
image



திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபான சாலை திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மையை ஏற்படுத்திய  13 நபர்களை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றது. 

இதில் 9 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர் எனவும், 

இதில் 5 ஆண்களை பாதுகாப்பு நிமித்தம் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த அமைதியின்மை சம்பவத்தில் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலையை முற்றுகையிட்டு நேற்று 2வது நாளாக சுழற்சிமுறை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்பு; அமைதியின்மையை ஏற்படுத்திய 13 பேர் கைது. திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபான சாலை திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மையை ஏற்படுத்திய  13 நபர்களை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றது. இதில் 9 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர் எனவும், இதில் 5 ஆண்களை பாதுகாப்பு நிமித்தம் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அமைதியின்மை சம்பவத்தில் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலையை முற்றுகையிட்டு நேற்று 2வது நாளாக சுழற்சிமுறை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement