சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவை எனவும், அவை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை எனவும் அரசு பதிலடி கொடுத்துள்ளது.
'தற்போதைய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மிகவும் மோசமான முறையில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்' என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபாநாயகர், எப்போதும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றார். ஆளுங்கட்சிக்குச் சார்பாக அவர் செயற்படுவதாகக் கூறுவது வடிகட்டிய பொய். நாடாளுமன்றத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் சதிகளின் ஓர் அங்கமே இந்தத் தார்மீகக் குற்றச்சாட்டுகள்.
எந்தவொரு தரப்பினரும் முறைப்பாடு செய்வதற்கு இந்நாட்டில் ஜனநாயக உரிமை உண்டு. அதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே ஒருவர் பதவி விலக வேண்டும் எனக் கோருவது வேடிக்கையானது. சபாநாயகர் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. சட்ட ரீதியான விசாரணைகள் எவை முன்னெடுக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அவர் தயாராகவே உள்ளார்.
அரசமைப்புப் பேரவையின் தலைவராகச் சபாநாயகர் இருப்பதால் விசாரணைகள் பாதிக்கப்படும் என்பது தவறான வாதம். அந்தப் பேரவையில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர் என்பதை மரிக்கார் போன்றோர் மறந்துவிடக் கூடாது. தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகச் சபாநாயகரின் பதவியைப் பறிக்க முயல்வதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. - என்றார்.
எதிரணியின் குற்றச்சாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியே- சபாநாயகருக்கு அரசு முண்டுகொடுப்பு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவை எனவும், அவை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை எனவும் அரசு பதிலடி கொடுத்துள்ளது.'தற்போதைய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மிகவும் மோசமான முறையில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்' என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபாநாயகர், எப்போதும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றார். ஆளுங்கட்சிக்குச் சார்பாக அவர் செயற்படுவதாகக் கூறுவது வடிகட்டிய பொய். நாடாளுமன்றத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் சதிகளின் ஓர் அங்கமே இந்தத் தார்மீகக் குற்றச்சாட்டுகள்.எந்தவொரு தரப்பினரும் முறைப்பாடு செய்வதற்கு இந்நாட்டில் ஜனநாயக உரிமை உண்டு. அதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே ஒருவர் பதவி விலக வேண்டும் எனக் கோருவது வேடிக்கையானது. சபாநாயகர் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. சட்ட ரீதியான விசாரணைகள் எவை முன்னெடுக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அவர் தயாராகவே உள்ளார்.அரசமைப்புப் பேரவையின் தலைவராகச் சபாநாயகர் இருப்பதால் விசாரணைகள் பாதிக்கப்படும் என்பது தவறான வாதம். அந்தப் பேரவையில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர் என்பதை மரிக்கார் போன்றோர் மறந்துவிடக் கூடாது. தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகச் சபாநாயகரின் பதவியைப் பறிக்க முயல்வதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. - என்றார்.