எதிர்பாராத விதமாக உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரின், சிறுநீரகம் உட்பட வேறு ஒருவருக்குப் பொருத்தக்கூடிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார விஞ்ஞான பீடத்தில் தாதியியல் மற்றும் குடும்ப நலப் பட்டப் படிப்பை பயின்று வந்த மூன்றாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்றிருந்த இந்த மாணவி, 6 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில், தனது வீட்டில் உள்ள குளியலறையில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
முதுகெலும்பு சுருக்கத்தால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது என்று பிரேதப் பரிசோதனையின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெற்றோரின் தீர்மானத்துக்கமைய, அவரது உறுப்புகள் அகற்றப்பட்ட பின்னர், மாணவியின் பிரேதப் பரிசோதனை நேற்று கண்டி தேசிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.
திடீரென உயிரிழந்த கொத்தலாவல பல்கலை மாணவியின் உறுப்புகள் தானம் எதிர்பாராத விதமாக உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரின், சிறுநீரகம் உட்பட வேறு ஒருவருக்குப் பொருத்தக்கூடிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.சுகாதார விஞ்ஞான பீடத்தில் தாதியியல் மற்றும் குடும்ப நலப் பட்டப் படிப்பை பயின்று வந்த மூன்றாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்றிருந்த இந்த மாணவி, 6 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில், தனது வீட்டில் உள்ள குளியலறையில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டார்.பின்னர் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.முதுகெலும்பு சுருக்கத்தால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது என்று பிரேதப் பரிசோதனையின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்தநிலையில், பெற்றோரின் தீர்மானத்துக்கமைய, அவரது உறுப்புகள் அகற்றப்பட்ட பின்னர், மாணவியின் பிரேதப் பரிசோதனை நேற்று கண்டி தேசிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.