• Nov 06 2024

ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியை மீண்டும் பிடிப்பதே எமது இலக்கு - நாமல் பகிரங்கம்

Chithra / Nov 6th 2024, 7:58 am
image

Advertisement


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசு இன்னும் ஐந்து வருடங்களுக்குத் தொடர வேண்டும் என்றும் அவ்வாறு அல்லாவிட்டால் நாடு சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை விடவும் மொட்டுக் கட்சிக்குரிய வாக்கு வங்கி தற்போது அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் மீண்டெழும் எனவும், கட்சியை மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியை மீண்டும் பிடிப்பதே எமது இலக்காகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியை மீண்டும் பிடிப்பதே எமது இலக்கு - நாமல் பகிரங்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசு இன்னும் ஐந்து வருடங்களுக்குத் தொடர வேண்டும் என்றும் அவ்வாறு அல்லாவிட்டால் நாடு சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை விடவும் மொட்டுக் கட்சிக்குரிய வாக்கு வங்கி தற்போது அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் மீண்டெழும் எனவும், கட்சியை மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியை மீண்டும் பிடிப்பதே எமது இலக்காகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement