• Jan 07 2025

சட்டத்தின் மூலமே எமது அரசாங்கம் : ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுப்பு - அருண் ஹேமச்சந்திரா

Tharmini / Dec 29th 2024, 4:55 pm
image

எமது அரசாங்கம் எந்த அரசியல் பழிவாங்களையும் முன்னெடுக்காது.

ஊழல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சட்டத்தின் மூலம் மட்டுமே நாங்கள் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபுவின் வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று (28) திடீர் விஜயம் ஒன்றினை பிரதியமைச்சர் மேற்கொண்டார்.

இதன்போது வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடலிலும் பிரதியமைச்சர் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனியின் ஏற்பாட்டில் பிரதிமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு,வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் மைதிலி,பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர், வைத்தியசாலையின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, வைத்தியசாலையின் தேவைப்பாடுகள்,வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றினை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் வைத்தியசாலைக்கு மிக தேவைப்பாடான விடயங்களை பெற்றுக்கொடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடல்களைத்தொடர்ந்து வைத்தியசாலையின் அனைத்துப்பகுதிக்கும் சென்று பார்வையிட்ட பிரதியமைச்சர் குழுவினர் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப்பணிகளையும் பார்வையிட்டார்.





சட்டத்தின் மூலமே எமது அரசாங்கம் : ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுப்பு - அருண் ஹேமச்சந்திரா எமது அரசாங்கம் எந்த அரசியல் பழிவாங்களையும் முன்னெடுக்காது.ஊழல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.சட்டத்தின் மூலம் மட்டுமே நாங்கள் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபுவின் வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று (28) திடீர் விஜயம் ஒன்றினை பிரதியமைச்சர் மேற்கொண்டார்.இதன்போது வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடலிலும் பிரதியமைச்சர் கலந்துகொண்டார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனியின் ஏற்பாட்டில் பிரதிமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு,வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் மைதிலி,பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர், வைத்தியசாலையின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, வைத்தியசாலையின் தேவைப்பாடுகள்,வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றினை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.அத்துடன் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் வைத்தியசாலைக்கு மிக தேவைப்பாடான விடயங்களை பெற்றுக்கொடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடல்களைத்தொடர்ந்து வைத்தியசாலையின் அனைத்துப்பகுதிக்கும் சென்று பார்வையிட்ட பிரதியமைச்சர் குழுவினர் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப்பணிகளையும் பார்வையிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement