• Apr 28 2026

1800க்கும் மேற்பட்ட இடங்கள் சோதனை; அதிரடி டெங்கு ஒழிப்பு

Chithra / Feb 12th 2026, 11:43 am
image

அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் 

பெரியநீலாவணை பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், 

பாரிய விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


பல்வேறு குழுக்களாகப் பிரிந்த அதிகாரிகள் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பராமரிப்பின்றி 

காணப்பட்ட வெற்றுக்காணிகளைத் தீவிரமாகச் சோதனையிட்டனர்.


1851 வீடுகள், 5 பாடசாலைகள், மதஸ்தலங்கள் மற்றும் பொது இடங்கள் இதன்போது சோதனையிடப்ட்டன.


இன்போது 341 இடங்கள் டெங்கு நுளம்பு பெருகும் நிலையில் காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டது.

சுகாதார விதிமுறைகளை மீறிய 16 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டது.


சோதனைகளின் போது நீர் தேங்கியிருந்த டயர்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் அகற்றப்பட்டதுடன், 

பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் டெங்கு அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.


1800க்கும் மேற்பட்ட இடங்கள் சோதனை; அதிரடி டெங்கு ஒழிப்பு அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பாரிய விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.பல்வேறு குழுக்களாகப் பிரிந்த அதிகாரிகள் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பராமரிப்பின்றி காணப்பட்ட வெற்றுக்காணிகளைத் தீவிரமாகச் சோதனையிட்டனர்.1851 வீடுகள், 5 பாடசாலைகள், மதஸ்தலங்கள் மற்றும் பொது இடங்கள் இதன்போது சோதனையிடப்ட்டன.இன்போது 341 இடங்கள் டெங்கு நுளம்பு பெருகும் நிலையில் காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டது.சுகாதார விதிமுறைகளை மீறிய 16 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டது.சோதனைகளின் போது நீர் தேங்கியிருந்த டயர்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் அகற்றப்பட்டதுடன், பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் டெங்கு அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement