• Apr 16 2026

‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட சாரதிகள் போக்குவரத்து அபராதங்கள்!

Chithra / Feb 4th 2026, 12:45 pm
image

 

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ பயன்பாட்டைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 46,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் தண்டப் பணம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மொத்தம் 46,635 வாகன சாரதிகள் ‘GovPay’ செயலி மூலம் அபராதம் செலுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 11,715 சாரதிகள் ‘GovPay’ செயலியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்தினர்.

அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினால் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட சாரதிகள் போக்குவரத்து அபராதங்கள்  போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ பயன்பாட்டைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 46,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் தண்டப் பணம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, மொத்தம் 46,635 வாகன சாரதிகள் ‘GovPay’ செயலி மூலம் அபராதம் செலுத்தியுள்ளனர்.இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 11,715 சாரதிகள் ‘GovPay’ செயலியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்தினர்.அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினால் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement