• Dec 05 2024

மழையிலிருந்து தப்பித்த நெற்பயிர்களுக்கு மடிச்சுக்கட்டி நோய் - கவலையில் யாழ். விவசாயிகள்

Chithra / Dec 4th 2024, 3:54 pm
image

 

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு  குடத்தனை பகுதியில் தற்பொழுது நெல் பயிர்களுக்கு  மடிச்சுக்கட்டி நோய் பரவி வருகின்றது.

அண்மையில் நாட்டில் பெய்த கன மழையின் பின்னரே இந் நோய்த்  தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக பல இடங்களில் நெல் வயல்கள் அழிந்து நாசமாகி இருந்த நிலையில், தற்போது  மழையிலிருந்து தப்பித்த ஒரு சில வயல்களில் நெற்பயிர்களுக்கு மடிச்சுக் கட்டி நோய் பரவி வருகின்றது. 

இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளதுடன், மருந்து விசிறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.


மழையிலிருந்து தப்பித்த நெற்பயிர்களுக்கு மடிச்சுக்கட்டி நோய் - கவலையில் யாழ். விவசாயிகள்  யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு  குடத்தனை பகுதியில் தற்பொழுது நெல் பயிர்களுக்கு  மடிச்சுக்கட்டி நோய் பரவி வருகின்றது.அண்மையில் நாட்டில் பெய்த கன மழையின் பின்னரே இந் நோய்த்  தாக்கம் ஏற்பட்டுள்ளது.கடும் மழை காரணமாக பல இடங்களில் நெல் வயல்கள் அழிந்து நாசமாகி இருந்த நிலையில், தற்போது  மழையிலிருந்து தப்பித்த ஒரு சில வயல்களில் நெற்பயிர்களுக்கு மடிச்சுக் கட்டி நோய் பரவி வருகின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளதுடன், மருந்து விசிறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement