சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பகுதியில் உள்ள கல்லடி வெட்டுவான் வயல் நிலப் பகுதிகள் வீதிகள் பாதிப்படைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது...
பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் நெற் செய்கை அழிந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
இதன் மூலம் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன், கல்லடிவெட்டுவான் கிரான் உள்ளிட்ட வேளாண்மைச் செய்கை நிலப்பகுதிகள் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
அத்துடன் கனமழை வெள்ள நீரின் அளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் முழுமையான அழிவை சந்திக்க நேரிட்டதாகவும் தெரிவித்ததுடன் விவசாயிகளுக்காக நஷ்ட ஈடுகளை வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிண்ணியாவில் சீரற்ற காலநிலை காரணமாக நெல் வயல்கள் பாதிப்பு.samugammedia சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பகுதியில் உள்ள கல்லடி வெட்டுவான் வயல் நிலப் பகுதிகள் வீதிகள் பாதிப்படைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் நெற் செய்கை அழிந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் இதன் மூலம் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன், கல்லடிவெட்டுவான் கிரான் உள்ளிட்ட வேளாண்மைச் செய்கை நிலப்பகுதிகள் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் அத்துடன் கனமழை வெள்ள நீரின் அளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் முழுமையான அழிவை சந்திக்க நேரிட்டதாகவும் தெரிவித்ததுடன் விவசாயிகளுக்காக நஷ்ட ஈடுகளை வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.