கிளிநொச்சி, குமரபுரம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி மோசடியான முறையில் நெல்லை கொள்வனவு செய்தவர்களை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து பிடித்துள்ளனர்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
சில தனியார்கள் நெற் கொள்வனவுகளில் மோசயில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் தனியார் வர்த்தகர்களால் நெல் கொள்ளளவு செய்த சமயம் முத்திரையிடப்படாத தராசினை பயன்படுத்தி நெல்லின் எடைகளை குறைத்து கொள்வனவு செய்ததை அவதானித்த விவசாயி குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தினர்
பொதுமக்கள் குறித்த தனியார் வர்த்தகரை தடுத்து நிறுத்தி சம்பவ இடத்துக்கு பொலிசார் வரவழைத்தனர். விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல் முற்று முழுதாக மீட்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான எடைகளின் படி பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நெல் கொள்ளளவு செய்யும் தரகர்கள் ஊடாகவும் நெல் கொள்ளளவு செய்கின்ற தனியார் ஊடாகவும் பெருமளவான மோசடிகள் விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி நெல் கொள்வனவு மோசடி கிளிநொச்சியில் மடக்கிப் பிடித்த மக்கள் கிளிநொச்சி, குமரபுரம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி மோசடியான முறையில் நெல்லை கொள்வனவு செய்தவர்களை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து பிடித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.சில தனியார்கள் நெற் கொள்வனவுகளில் மோசயில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் தனியார் வர்த்தகர்களால் நெல் கொள்ளளவு செய்த சமயம் முத்திரையிடப்படாத தராசினை பயன்படுத்தி நெல்லின் எடைகளை குறைத்து கொள்வனவு செய்ததை அவதானித்த விவசாயி குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தினர்பொதுமக்கள் குறித்த தனியார் வர்த்தகரை தடுத்து நிறுத்தி சம்பவ இடத்துக்கு பொலிசார் வரவழைத்தனர். விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல் முற்று முழுதாக மீட்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான எடைகளின் படி பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நெல் கொள்ளளவு செய்யும் தரகர்கள் ஊடாகவும் நெல் கொள்ளளவு செய்கின்ற தனியார் ஊடாகவும் பெருமளவான மோசடிகள் விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.