• Apr 27 2024

இலங்கை வந்தது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்..!

Chithra / Jan 30th 2024, 2:34 pm
image

Advertisement

 

பாகிஸ்தானின் கடற்படைக் கப்பலான சைஃப் (SAIF) இன்று செவ்வாய்க்கிழமை (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

சைஃப் 123 மீற்றர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இந்த போர்க்கப்பல் கேப்டன் முஹம்மது அலியின் தலைமையில் 276 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகின்றது.

கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள்.

இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானின் சைஃப் கப்பலானது எதிர்வரும் பெப்ரவரி  முதலாம் திகதி இலங்கையை விட்டு வெளியேறி, இலங்கை கடற்படையின் கப்பலுடன் கொழும்பு கடற்பகுதியில் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது.


இலங்கை வந்தது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்.  பாகிஸ்தானின் கடற்படைக் கப்பலான சைஃப் (SAIF) இன்று செவ்வாய்க்கிழமை (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.சைஃப் 123 மீற்றர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இந்த போர்க்கப்பல் கேப்டன் முஹம்மது அலியின் தலைமையில் 276 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகின்றது.கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள்.இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானின் சைஃப் கப்பலானது எதிர்வரும் பெப்ரவரி  முதலாம் திகதி இலங்கையை விட்டு வெளியேறி, இலங்கை கடற்படையின் கப்பலுடன் கொழும்பு கடற்பகுதியில் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement