2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாக்கர் பங்கேற்றனர். இந்த தகுதிச் சுற்றில் ரிதம் சங்க்வான் 15-வது இடத்தை பிடித்து வெளியேறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த மனு பாக்கர் மொத்தம் உள்ள 6 சுற்றுகளில் 600-க்கு 580 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஹரியானா ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு பாக்கர் ஆவார். 2018 இல் மனு மெக்சிகோவில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்றார். பிறகு இரண்டாவது தங்கப்பதக்கத்தை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வென்றுள்ளார்.
16 வயதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒரே நாளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி - முதல் பதக்கத்தை வென்றது இந்தியா 2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாக்கர் பங்கேற்றனர். இந்த தகுதிச் சுற்றில் ரிதம் சங்க்வான் 15-வது இடத்தை பிடித்து வெளியேறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த மனு பாக்கர் மொத்தம் உள்ள 6 சுற்றுகளில் 600-க்கு 580 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.ஹரியானா ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு பாக்கர் ஆவார். 2018 இல் மனு மெக்சிகோவில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்றார். பிறகு இரண்டாவது தங்கப்பதக்கத்தை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வென்றுள்ளார்.16 வயதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒரே நாளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.