• Apr 02 2025

திருகோணமலையின் ஒரு பகுதி இந்தியாவுக்கு...! மக்களுடன் சேர்ந்து போராடுவோம்...! றிசாட் எம்.பி...!samugammedia

Sharmi / Dec 16th 2023, 3:49 pm
image

திருகோணமலையின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவு ஏற்படுமாக இருந்தாலும் நாங்களும் மக்களுடன் சேர்ந்து போராடுவோம் என மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலையின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்தால் அங்கு இருக்கின்ற மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதை அனுமதிக்க முடியாது. அவர்களை வெளியேற்றுவதாக இருந்தால் இந்த வீட்டை விட அழகான வசதி உள்ள வீடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

தற்போது இருக்கின்ற தொழில் வாய்ப்புகளை விடவும் மிகவும் அழகான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அப்படி ஒரு நஷ்டஈடுகளை கொடுத்து செய்வது பரவாயில்லை.

அப்படி இல்லாமல் பலவந்தமாக மக்களை வெளியேற்றி  காணிகளை அபகரித்துக் கொடுத்தால் அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக மக்களோடு சேர்ந்து போராட்டம்  செய்வோம் செய்வோம் எனவும்  றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.




திருகோணமலையின் ஒரு பகுதி இந்தியாவுக்கு. மக்களுடன் சேர்ந்து போராடுவோம். றிசாட் எம்.பி.samugammedia திருகோணமலையின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவு ஏற்படுமாக இருந்தாலும் நாங்களும் மக்களுடன் சேர்ந்து போராடுவோம் என மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,திருகோணமலையின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்தால் அங்கு இருக்கின்ற மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதை அனுமதிக்க முடியாது. அவர்களை வெளியேற்றுவதாக இருந்தால் இந்த வீட்டை விட அழகான வசதி உள்ள வீடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.தற்போது இருக்கின்ற தொழில் வாய்ப்புகளை விடவும் மிகவும் அழகான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அப்படி ஒரு நஷ்டஈடுகளை கொடுத்து செய்வது பரவாயில்லை.அப்படி இல்லாமல் பலவந்தமாக மக்களை வெளியேற்றி  காணிகளை அபகரித்துக் கொடுத்தால் அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக மக்களோடு சேர்ந்து போராட்டம்  செய்வோம் செய்வோம் எனவும்  றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement