• May 09 2024

நாகையில் இருந்து இலங்கைக்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவை..! மத்திய அரசு திட்டம் samugammedia

Chithra / Sep 20th 2023, 2:16 pm
image

Advertisement

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் தொடக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபரில் பயணிகள் கப்பல் தொடங்கப்படும் என்று தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.   

நாகையில் இருந்து இலங்கைக்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவை. மத்திய அரசு திட்டம் samugammedia இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் தொடக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபரில் பயணிகள் கப்பல் தொடங்கப்படும் என்று தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.   

Advertisement

Advertisement

Advertisement