சுகாதார சேவை அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது.
மருத்துவர்களின் DAT கொடுப்பனவு 35000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள தொகை 50000 ரூபாவாக உயர்த்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதற்காக எங்களிற்கு வழங்கப்படும் 3000 ரூபா அப்படியே உள்ளது. மருத்துவ அதிகாரிகளுக்கு 35000 ரூபாவாக கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில், தமது கொடுப்பனவை அதிகரிக்கும் நோக்கில், இடைக்கால மருத்துவ கூட்டுப் படை வாரியம் 10.01.2024 அன்று காலை 8.00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னேடுத்துவருகின்றனர்.
நோயாளர் விடுதி, மற்றும் அவசரகால சேவைகள் மட்டும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை.
இதன் போது வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் தெரிவிக்கையில்,
வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம், தாதியர்கள் ஆர்ப்பாட்டம், சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்| தாதியர்கள் ஆர்ப்பாட்டம் என தொடர்ச்சியாக மாறி மாறி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதன் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாதாந்த கிளினிக் பரிசோதனைகளிற்கு வருபவர்கள் தமது நாளாந்தம் பயன்படுத்த வேண்டிய நோய்களுக்கான மருந்து வில்லைகளை பெற முடியாத நிலையில் பெரிதும் சிரமப்படுவதாகவும், அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகத்தில் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தூரத்தில் இருந்து முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு பெற்று வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவதும், மீண்டும் சிகிச்சை பெறாமல் திரும்பிச் செல்வதுமாக தொடர்கிறது.
எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமக்கான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார சேவை அலுவலர்களின் போராட்டத்தால் நோயாளர்கள் அவதி.samugammedia சுகாதார சேவை அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது.மருத்துவர்களின் DAT கொடுப்பனவு 35000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள தொகை 50000 ரூபாவாக உயர்த்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதற்காக எங்களிற்கு வழங்கப்படும் 3000 ரூபா அப்படியே உள்ளது. மருத்துவ அதிகாரிகளுக்கு 35000 ரூபாவாக கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், தமது கொடுப்பனவை அதிகரிக்கும் நோக்கில், இடைக்கால மருத்துவ கூட்டுப் படை வாரியம் 10.01.2024 அன்று காலை 8.00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னேடுத்துவருகின்றனர்.நோயாளர் விடுதி, மற்றும் அவசரகால சேவைகள் மட்டும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை.இதன் போது வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் தெரிவிக்கையில், வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம், தாதியர்கள் ஆர்ப்பாட்டம், சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்| தாதியர்கள் ஆர்ப்பாட்டம் என தொடர்ச்சியாக மாறி மாறி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதன் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாதாந்த கிளினிக் பரிசோதனைகளிற்கு வருபவர்கள் தமது நாளாந்தம் பயன்படுத்த வேண்டிய நோய்களுக்கான மருந்து வில்லைகளை பெற முடியாத நிலையில் பெரிதும் சிரமப்படுவதாகவும், அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகத்தில் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தூரத்தில் இருந்து முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு பெற்று வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவதும், மீண்டும் சிகிச்சை பெறாமல் திரும்பிச் செல்வதுமாக தொடர்கிறது. எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமக்கான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.