• May 17 2024

சீரான ஆம்புலன்ஸ் சேவை இன்மையால் அவதியுறும் நோயாளிகள்- வட்டு வைத்தியசாலையில் அவலம்!

Sharmi / Dec 3rd 2022, 3:12 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தாங்கள் அவதியுறுவதாக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில், அராலி, துணவி, முதலிய கோவில் சங்கரத்தை, சித்தங்கேணி, மூளாய், சுழிபுரம் மற்றும் பொன்னாலை பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் குறித்த வைத்தியசாலையில் சீரான ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை.

கடந்த 23.11.2022 அன்று இளம் குடும்பப்பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அதனைப் பார்த்த சிறுமி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமுற்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த சிறுமியை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றவேளை அவருக்கு அங்கு முதலுதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர்கள் கூறினர்.

அதற்கு நாங்கள், வைத்தியசாலை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லுமாறு கூறினோம். அதற்கு அவர்கள், வைத்தியசாலை ஆம்புலன் இல்லை என கூறினார்கள். ஆனால் வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று நிற்பதை அவதானித்த நாங்கள் ஆம்புலன்ஸ் நிற்கிறது தானே அந்த ஆம்புலன்ஸில் அழைத்து செல்லுங்கள் என கூறினோம்.

அதற்கு அவர்கள், இந்த ஆம்புலன்ஸ் காரைநகர் வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ். கல்லூண்டாய் பகுதியில் வந்துகொண்டிருந்தவேளை இந்த ஆம்புலன்ஸ் பழுதடைந்துள்ளமையால் இங்கு கொண்டுவந்து பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

எமது வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் காரைநகர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காரைநகரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கான தூரம் அதிகம் என்பதால் அங்கு உள்ள நோயாளிகளை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு எமது ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. மாலை தான் எங்களது வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் வரும் என கூறினர்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்த சிறுமி சிகிச்சை வசதிகள் அல்லது முதலுதவிகள் எதுவும் இல்லாத முச்சக்கர வண்டி மூலமே யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எமது வைத்தியசாலை ஒரு பிரதேச தரத்திலான வைத்தியசாலை. ஆனால் இங்கு 24 மணிநேர வைத்திய சேவைகள் இல்லை. அவசரம் என்று வருபவர்கள் மேலதிக சிகிச்சைக்காக, எந்தவிதமான மருத்துவ வசதிகளும் இல்லாத தனியார் வாடகை வாகனங்களில், உயிரை கைகளில் பிடித்துக் கொண்டு தான் யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை.

இந்த பிரச்சினை இன்று நேற்று அல்ல பன்னெடுங்காலமாக இடம்பெற்று வருகிறது. ஆம்புலன்ஸ் இருந்தாலும், சாரதி இல்லை அல்லது வேறு ஏதாவது காரணங்கள் கூறி ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் சேவை என்பது எமக்கு எட்டாக் கனியாகவே காணப்படுகிறது.

பழுதடைந்த ஆம்புலன்ஸ் நிறுத்திவைப்பதற்கு இது வாகனங்கள் திருத்தும் நிலையமா அல்லது வைத்தியசாலையா? எங்களது வைத்தியசாலை ஆம்புலன்ஸ் எங்களுக்கு தேவை. 24 மணிநேர வைத்திய சேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்நிலைகள் சீருக்கு வராத பட்சத்தில் நாங்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி ஏற்படும். எனவே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு விரைவில் உரிய தீர்வினை வழங்க வேண்டும் - என அவர்கள் தெரிவித்தனர்.

சீரான ஆம்புலன்ஸ் சேவை இன்மையால் அவதியுறும் நோயாளிகள்- வட்டு வைத்தியசாலையில் அவலம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தாங்கள் அவதியுறுவதாக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில், அராலி, துணவி, முதலிய கோவில் சங்கரத்தை, சித்தங்கேணி, மூளாய், சுழிபுரம் மற்றும் பொன்னாலை பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் குறித்த வைத்தியசாலையில் சீரான ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை.கடந்த 23.11.2022 அன்று இளம் குடும்பப்பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அதனைப் பார்த்த சிறுமி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமுற்றிருந்தார்.இந்நிலையில் குறித்த சிறுமியை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றவேளை அவருக்கு அங்கு முதலுதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர்கள் கூறினர்.அதற்கு நாங்கள், வைத்தியசாலை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லுமாறு கூறினோம். அதற்கு அவர்கள், வைத்தியசாலை ஆம்புலன் இல்லை என கூறினார்கள். ஆனால் வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று நிற்பதை அவதானித்த நாங்கள் ஆம்புலன்ஸ் நிற்கிறது தானே அந்த ஆம்புலன்ஸில் அழைத்து செல்லுங்கள் என கூறினோம்.அதற்கு அவர்கள், இந்த ஆம்புலன்ஸ் காரைநகர் வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ். கல்லூண்டாய் பகுதியில் வந்துகொண்டிருந்தவேளை இந்த ஆம்புலன்ஸ் பழுதடைந்துள்ளமையால் இங்கு கொண்டுவந்து பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.எமது வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் காரைநகர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காரைநகரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கான தூரம் அதிகம் என்பதால் அங்கு உள்ள நோயாளிகளை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு எமது ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. மாலை தான் எங்களது வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் வரும் என கூறினர்.இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்த சிறுமி சிகிச்சை வசதிகள் அல்லது முதலுதவிகள் எதுவும் இல்லாத முச்சக்கர வண்டி மூலமே யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.எமது வைத்தியசாலை ஒரு பிரதேச தரத்திலான வைத்தியசாலை. ஆனால் இங்கு 24 மணிநேர வைத்திய சேவைகள் இல்லை. அவசரம் என்று வருபவர்கள் மேலதிக சிகிச்சைக்காக, எந்தவிதமான மருத்துவ வசதிகளும் இல்லாத தனியார் வாடகை வாகனங்களில், உயிரை கைகளில் பிடித்துக் கொண்டு தான் யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை.இந்த பிரச்சினை இன்று நேற்று அல்ல பன்னெடுங்காலமாக இடம்பெற்று வருகிறது. ஆம்புலன்ஸ் இருந்தாலும், சாரதி இல்லை அல்லது வேறு ஏதாவது காரணங்கள் கூறி ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் சேவை என்பது எமக்கு எட்டாக் கனியாகவே காணப்படுகிறது.பழுதடைந்த ஆம்புலன்ஸ் நிறுத்திவைப்பதற்கு இது வாகனங்கள் திருத்தும் நிலையமா அல்லது வைத்தியசாலையா எங்களது வைத்தியசாலை ஆம்புலன்ஸ் எங்களுக்கு தேவை. 24 மணிநேர வைத்திய சேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்நிலைகள் சீருக்கு வராத பட்சத்தில் நாங்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி ஏற்படும். எனவே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு விரைவில் உரிய தீர்வினை வழங்க வேண்டும் - என அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement