வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 12 ஆம் நாள் திருவிழா பக்தர்களை சிலிர்க்க வைக்கும் வகையில் சிறப்பாக இன்று இடம்பெற்றுள்ளது.
நல்லூரானின் மஹோற்சவம் கடந்த 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் விமர்சையாக ஆரம்பமானது.
தொடர்ச்சியாக 25 நாள் இடம்பெறவுள்ள மஹோற்சவத்தில் இன்று 12 ஆம் நாள் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இன்றைய திருவிழாவில் காலை, மதிய விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்று பகல் பொழுதில் மயில் வாகனத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தன்னுடைய வாகனமான மயில் வாகனத்தில் அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முருகனுடன் இணைந்ததாக வள்ளி, தெய்வானை ஆகியோரும் தனித்தனியே மயில் வாகனத்தில் காட்சியளித்தனர்.
மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் வலம் வந்த காட்சி பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.
மதிய நேரப் பூசைகள் முடிவடைந்ததை் தொடர்ந்து மாலை நேர பூசைகளும் சிறப்பாக இடம்பெற்றது.
பகலில் மயிலில் உலா வந்த முருகன், மாலையில் கிளியில் உலா வந்த காட்சி பக்தர்களுக்கு மெருகூட்டுவதாக அமைந்தது.
பகலில் மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் வலம் வந்தது போலவே மாலையிலும் கிளி வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு நாள் திருவிழாவிலும் பக்தர்களை மெச்சும் வகையில் நல்லூரான் அலங்காரத்துடன் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.
அதேபோன்றே இன்றைய 12 ஆம் நாள் திருவிழாவில் பக்தர்கள் புடைசூழ்ந்து கிளி, மயில் வாகனங்களில் நல்லூர்க்கந்தன் வலம் வந்துள்ளார்.
பகலில் மயில் வாகனம் - மாலையில் கிளி வாகனம்; பக்தர்களை சிலிர்க்க வைக்கும் நல்லூரானின் 12ஆம் நாள் திருவிழா வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 12 ஆம் நாள் திருவிழா பக்தர்களை சிலிர்க்க வைக்கும் வகையில் சிறப்பாக இன்று இடம்பெற்றுள்ளது. நல்லூரானின் மஹோற்சவம் கடந்த 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் விமர்சையாக ஆரம்பமானது. தொடர்ச்சியாக 25 நாள் இடம்பெறவுள்ள மஹோற்சவத்தில் இன்று 12 ஆம் நாள் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது. இன்றைய திருவிழாவில் காலை, மதிய விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்று பகல் பொழுதில் மயில் வாகனத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தன்னுடைய வாகனமான மயில் வாகனத்தில் அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முருகனுடன் இணைந்ததாக வள்ளி, தெய்வானை ஆகியோரும் தனித்தனியே மயில் வாகனத்தில் காட்சியளித்தனர். மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் வலம் வந்த காட்சி பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. மதிய நேரப் பூசைகள் முடிவடைந்ததை் தொடர்ந்து மாலை நேர பூசைகளும் சிறப்பாக இடம்பெற்றது. பகலில் மயிலில் உலா வந்த முருகன், மாலையில் கிளியில் உலா வந்த காட்சி பக்தர்களுக்கு மெருகூட்டுவதாக அமைந்தது. பகலில் மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் வலம் வந்தது போலவே மாலையிலும் கிளி வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் கொடுத்துள்ளார். ஒவ்வொரு நாள் திருவிழாவிலும் பக்தர்களை மெச்சும் வகையில் நல்லூரான் அலங்காரத்துடன் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். அதேபோன்றே இன்றைய 12 ஆம் நாள் திருவிழாவில் பக்தர்கள் புடைசூழ்ந்து கிளி, மயில் வாகனங்களில் நல்லூர்க்கந்தன் வலம் வந்துள்ளார்.