• Jul 05 2025

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் இம்மாதம் முதல் அதிகரிப்பு

Chithra / Jul 3rd 2025, 1:21 pm
image

 

வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனால், ஓய்வுபெற்ற 500,000 க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இந்த உயர்வான ஓய்வூதியத்திற்குத் தகுதியாளர்களாக இருக்கிறார்கள் என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் இம்மாதம் முதல் அதிகரிப்பு  வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.இதனால், ஓய்வுபெற்ற 500,000 க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இந்த உயர்வான ஓய்வூதியத்திற்குத் தகுதியாளர்களாக இருக்கிறார்கள் என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement