• Sep 26 2024

ஒரு அமைச்சு மற்றும் ஒரு நாடு என்ற வகையில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஒன்று திரளவேண்டும் - விஜித ஹேரத் தெரிவிப்பு

Anaath / Sep 25th 2024, 7:24 pm
image

Advertisement

இன,மத அனைத்து வேறுபாடுகளையும் விட்டுவிட்டு, ஒரு அமைச்சு மற்றும் ஒரு நாடு என்ற வகையில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஒன்று திரளவேண்டும் என  துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

 துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் வளாகத்தில் பதவியேற்றபோதே அவர் இதனை தெறிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், 

நல்ல இலக்குகளை மனதில் கொண்டு நல்ல நாட்டை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையுடன் இந்த நாட்டு மக்கள் எமக்கு புதிய ஆணையை வழங்கியுள்ளனர். அதற்கான பெரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நடந்த மோசடிகள், ஊழல்கள், வீண் விரயங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியாளரும் தன்னடக்கத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். முறையான முறைகள் மூலம் டெண்டர் நடைமுறைகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக உறுதிமொழி எடுப்பது அனைவரின் பொறுப்பு என்று நான் நம்புகிறேன்.

அவ்வாறே, அனைத்து வேறுபாடுகளையும் விட்டுவிட்டு, ஒரு அமைச்சு மற்றும் ஒரு நாடு என்ற வகையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் கூட்டுப் பயணத்தில் பங்களிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

ஒரு அமைச்சு மற்றும் ஒரு நாடு என்ற வகையில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஒன்று திரளவேண்டும் - விஜித ஹேரத் தெரிவிப்பு இன,மத அனைத்து வேறுபாடுகளையும் விட்டுவிட்டு, ஒரு அமைச்சு மற்றும் ஒரு நாடு என்ற வகையில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஒன்று திரளவேண்டும் என  துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் வளாகத்தில் பதவியேற்றபோதே அவர் இதனை தெறிவித்துள்ளார்.இதன்போது உரையாற்றிய அவர், நல்ல இலக்குகளை மனதில் கொண்டு நல்ல நாட்டை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையுடன் இந்த நாட்டு மக்கள் எமக்கு புதிய ஆணையை வழங்கியுள்ளனர். அதற்கான பெரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நடந்த மோசடிகள், ஊழல்கள், வீண் விரயங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியாளரும் தன்னடக்கத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். முறையான முறைகள் மூலம் டெண்டர் நடைமுறைகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக உறுதிமொழி எடுப்பது அனைவரின் பொறுப்பு என்று நான் நம்புகிறேன்.அவ்வாறே, அனைத்து வேறுபாடுகளையும் விட்டுவிட்டு, ஒரு அமைச்சு மற்றும் ஒரு நாடு என்ற வகையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் கூட்டுப் பயணத்தில் பங்களிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement